சட்டம் படிக்க ஆசையா ..? சட்டக் கல்லூரிகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் இந்த கல்வியாண்டு 2018 – 2019 மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (28.05.2018) முதல் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

அதே போல் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் நடத்தப்படும் 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள 10 சட்டக் கல்லூரிகளில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம். நேரில் செல்ல முடியாதவர்கள் அஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்துள்ளது.

5 ஆண்டு சட்டப் படிப்பு (ஹானர்ஸ்) இன்று முதல் ஜூன் 18ம் தேதி வரையும், 5 ஆண்டு சட்டப் படிப்பு ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரையும், 3 ஆண்டு சட்டப் படிப்பு (ஹானர்ஸ்), 3 ஆண்டு சட்டப் படிப்பு ஜூன் 27ம் தேதி முதல் ஜூலை 27ம் தேதி வரையும், பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் மாணவ மாணவியர் கீழ் வரும் லிங்கை சொடுக்கி விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க :     http://tndalu.ac.in

http://tndalu.ac.in