Home செய்திகள் கொடைக்கானலில் அவலம் கண்டுகொள்ளாத நகராட்சி அதிகாரிகள்….வீடியோ பதிவு..

கொடைக்கானலில் அவலம் கண்டுகொள்ளாத நகராட்சி அதிகாரிகள்….வீடியோ பதிவு..

by ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வில்பட்டி ரோடு பழைய பாலிடெக்னிக் பகுதி சாலையில் குப்பை தொட்டி இல்லாததால் காட்டு மாடு மற்றும் காட்டுவிலங்குகள் சாலையில் உள்ள கழிவுகளையும் சாப்பிட்டு விட்டு சாலையில் நடப்பதால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இதை பல முறை கொடைக்கானல் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி சுப்பையாவிடம் நேரிலும் மற்றும் மனுவாகவும் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை செவிடன் காதில் சங்கு ஊதின மாதிரியாகத்தான் இருக்கிறது என்பது தான் கவலையாக இருக்கிறது என்று கூறும் இப்பகுதி பொதுமக்கள்,  மேலும் இந்த இடம் வனத்துறை கட்டுபாட்டில் உள்ள இடம் இவர்களும் கண்டு கொள்வதேயில்லை. இந்த இடத்தில் தான் சில சமூக விரோத செயல்கள் நடக்கின்றது. இங்கு கொட்டும் பழைய கழிவுகளை சாப்பிட்டுவிட்டு காட்டு விலங்குகள் வழியில் நடக்கும் பள்ளி குழந்தைகளை மூர்க்கதனமாக தாக்குகிறது என்பது வேதனைக்குரிய விஷயம் இதை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பகுதியில் ஒரு குப்பை தொட்டி வைத்தால் நன்றாக இருக்கும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கை.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!