Home செய்திகள் கீழக்கரையில் 21ம் தேதி அறிவிக்கப்பட்ட மின்தடை நீக்கப்பட்டாலும், பெருநாள் மதியம் வரை பல இடங்களில் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதி..

கீழக்கரையில் 21ம் தேதி அறிவிக்கப்பட்ட மின்தடை நீக்கப்பட்டாலும், பெருநாள் மதியம் வரை பல இடங்களில் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதி..

by ஆசிரியர்

கீழக்கரையில் ஹஜ் பெருநாளாகிய இன்று புதுத் தெரு, வடக்குத் தெரு மற்றும் தெற்கு தெருவின் பல பகுதிகள் என டிராஸ்ஃபார்மர் பழுதாகியதால் 21ம் தேதி இரவு முதல் இன்று (22/08/2018) மாலை வரை மின்சாரம் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

இதுகுறித்து மின் ஊழியர் ஒருவரிடம் கேட்டதற்கு “கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி அருகே உள்ள டிரான்ஸ்பாமர் நேற்றிரவு பழுதாகி புகைந்து விட்டது. இன்று காலை துணை மின்நிலையத்தில் இருந்த மற்றொரு டிரான்ஸ்பாமர் மாற்றியதால் மின்தடை செய்ய வேண்டிய சூழ்நிலை. அதன்பின் சிறிது நேரத்திலே மாற்றிய டிரான்ஸ்பாமரும் புகைந்து விட்டது. இதை மாற்ற வேறு டிரான்ஸ்பாமர் இல்லை. ஆகவே இராமநாதபுரம் ரோட்டில் கீழக்கரை துணை மின் நிலையத்துக்குட்பட்ட உப்பளம் அருகே உள்ள டிரான்ஸ்பாமரை எடுத்து வந்த மாற்ற செல்கிறோம். எடுத்து வந்ததும் அதை மாற்றும் வரை ஒரு மணி நேரம் நகரெங்கும் மின்சாரம் இருக்காது. இந்த தடையால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என்றார்.

அதே போல் புதிய வீட்டிற்கு அனுமதி பெறும் பொழுது முழுமையான மின்சார தேவை விபரங்களை மின்சார வாரியத்திடம் கொடுப்பதும் இல்லை.  அதே சமயம் விழா கால சமையத்தில் கீழக்கரையில் பெருவாரியான மக்கள் ஒரே சமயத்தில் அனைத்து மின்சார சாதனங்களை உபயோகிப்பதில், இது போன்ற மின் தடைகள் ஏற்படுகின்றது.

மேலும் கீழக்கரையின் தேவைக்கு இன்னும் மூன்று கூடுதல் டிரான்ஸ்ஃபார்மர் வைக்க வேண்டும், ஆனால் அதை வைப்பதற்கு தேவையான இடம் மின்சார வாரியத்திடம் இல்லை என்பதும் ஒரு முக்கிய காரணமாகும்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!