
இராமநாதபும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலத்துடன் மக்கள் நல பாதுகாப்பு கழகம், கீழக்கரை மக்கள் களம் இணைந்து நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு முகாம் இன்று 17.02.17 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் கிழக்குத்தெரு தீனியா மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தேசிய மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு மற்றும் மறுவாழ்வு மையம் – சென்னை, மாவட்ட தொழில் மையம், மகளீர் மேம்பாட்டு திட்டம், மாவட்ட முன்னோடி வங்கி உள்ளிட்ட அரசுத்துறை அமைப்பினர் கலந்து கொண்டு மாற்றுதிறனாளிகளுக்கான அரசின் நல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு, சிறு தொழில் உதவி, தனியார் வேலை வாய்ப்பு, மகளீர் சுய முன்னேற்றம் குறித்த அனைத்து வழிகாட்டுதல்களையும் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.