கீழக்கரையில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை..

கீழக்கரையில் இரவு 10.30 மணி முதல் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.

தெற்கு அந்தமான் பகுதியில் ஏற்பட்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வினால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதியில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.