கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக டெல்லி பெண் சபியாவுக்கு நீதி கேட்டு ராமநாதபுரம் தொகுதி பொருளாளர் தலைமையில் கீழக்கரைமேற்கு நகரும் கிழக்கு நகரும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் கீழக்கரை ஜும்மா பள்ளி அருகில் நடைபெற்றது.

கிழக்குநகர் பொருளாளர் தொகுப்புரை நிகழ்த்தினார். மேற்குநகர் துணை தலைவர் அனைவரையும் வரவேற்றார் இதில்  pfi நகர் தலைவர் நதீர் கண்டன கோஷம் நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் ஜாபீரா மற்றும் பஹ்மீதா கண்டன கோஷம் நிகழ்த்தினர்.  நகர் தலைவர் பைசல் கருத்துரை நகர் நிகழ்த்தினார்.  மாவட்டபொது செயலாளர் ஜெமீல் சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் pfi மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம் மற்றும் டிவிஷன் தலைவர் ஹமீது சாலிஹ் மற்றும் sdpi மாவட்ட செயலாளர் நஜிமுதீன் நகர் செயலாளர் கீழைஅஸ்ரப் துணை தலைவர்கள் அபுதாஹிர், ஹாஜா அலாவுதீன் மற்றும் மாவட்ட தொகுதி நகர் கிளைகளின் நிர்வாகிகளும் பெண்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.