கீழக்கரை SDPI கட்சி சார்பாக சுதந்திரதின விழா..

இந்திய தேசத்தின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி இராமநாதபுரம் மாவட்டம் மேற்குத் தொகுதி கீழக்கரை நகர் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் வள்ளல் சீதக்காதி சாலை ஜூம்-ஆ பள்ளி முன்புறம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர் தலைவர் ஹமீது பைசல் தலைமை தாங்கி கருத்துரை வழங்கினார்.

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் கீழக்கரை நகர் தலைவர்  அஹமது நதீர் முன்னிலை வகித்தார். முன்னதாக நகர் இணைச் செயலாளர் தாஜூல் அமீன் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்திய தேசத்தின் மூவர்ணக் தேசியக் கொடியை நகர் செயலாளர் பகுருதீன் ஏற்றி வைத்தார் அதன் பிறகு சுதந்திர தின ஒற்றுமை கீதம் இசைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில பேச்சாளர் மொளலானா ஜஹாங்கிர் அருஸி சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ் மாநில பொதுச் செயலாளர் B.அப்துல் ஹமீது கலந்து கொண்டார். இராமநாதபுரம் மேற்கு தொகுதி துணைத் தலைவர் நூருல் ஜமான் மற்றும் இராமநாதபுரம் மேற்கு தொகுதி பொருளாளர் சகுபர் சாதிக் இராமநாதபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜூபைர் ஆப்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கீழக்கரை நகர் இணைச்செயலாளர் அயூப்கான்,நகர் பொருளாளர் முகம்மது அஸாருதீன், மற்றும் நகர் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஏனைய நகர் நிர்வாகிகள்,கிளை நிர்வாகிகள் பொதுமக்கள்,சிறுவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நகர் செயற்குழு உறுப்பினர் ஹுசைன் ரஹ்மான் தொகுத்து வழங்கினார்! இறுதியாக நகர் செயலாளர் பகுருதீன் நன்றியுரை நிகழ்த்தி இனிப்புகள் வழங்கப்பட்டு இனிதே நிறைவுற்றது.

உதவிக்கரம் நீட்டுங்கள்..