Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி……

கீழக்கரையில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி……

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் புதிய அலுவலகம் மற்றும் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடுத்தெரு வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க தலைவர் யூசுப் சாஹிப் தலைமை வகித்தார். கீழக்கரை அனைத்து ஜமாஅத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலைவைத்தனர். அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் செயலாளர் சேக் உசேன் அனைவரையும் வரவேற்றார். அறிமுக உரையை கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீக்கி நிகழ்த்தினார்.

கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு அலுவலகத்தை ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி திறந்துவைத்து சிறப்புரையாற்றினார். அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் தலைவர் ஹமீது இப்ராஹிம் சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தார். இராமநாதபுர மாவட்ட அனைத்து ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஷாஜகான் வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கீழக்கரை மீனாட்சி சொக்கநாதர் கோயில் பரம்பரை அறங்காவலர் மங்களேஸ்வர குருக்கள், புனித அந்தோனியார் தேவாலயம் பாதிரியார் ரெமிஜியஸ், கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் முருகேசன் மற்றும் முகம்மது சதக் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் அகமது உசைன் ஆசிப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில்  தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மாவட்ட முன்சீப் நீதிபதியாக கீழக்கரை உம்முல் ஃபரீதா பெண் நீதிபதியாக பதவி ஏற்றுள்ள அவரை கௌரவப்படுத்தும் விதமாகவும் மற்றும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் குற்றவியல் நீதிபதியாக கீழக்கரை சேர்ந்த முதல் ஆண் நீதிபதியாக பொறுப்பேற்று பணியாற்றும் சிவபழனிக்கும்,   கீழக்கரை அனைத்து ஜமாத் உபதலைவர் உமர் களஞ்சியம் கௌரவித்தார்.

அதேபோல் கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு நிலம் அன்பளிப்பாக சேகு மதார் சாகிபு அம்பலம் குடும்பம் சார்பில் வழங்கப்பட்டது இந்நிலத்தை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு பொருளாளர் சேகு அபூபக்கர் பெற்றுக்கொண்டார். கீழக்கரை நகராட்சி தூய்மை பணிக்காக முகமது சதக் அறக்கட்டளை சார்பில் டிராக்டர் அற்பணிப்பு செய்யப்பட்டது. அதை முகமது சதக் அறக்கட்டளை தலைவர் யூசுப் சாஹிப் நகராட்சி ஆணையாளர் தனலட்சுமியிடம் வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில்  ஏழை பெண்களுக்கு தையல் மெஷின்கள் அனைத்து ஜமாஅத் துணை செயலாளர் செய்யது அபுதாஹிர் மற்றும் துணைத் தலைவர் அப்துல் ஹமீது வழங்கினார். கீழக்கரை மக்களுக்கு பயன்படும் வகையில் சோலார் மின் விளக்கை அனைத்து ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள் வழங்கினர். இந்நிகழ்வில் கீழக்கரை காவல் நிலையத்திற்கு கணினி மற்றும் அச்சு இயந்திரத்தை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு தலைவர் ஹமீது இப்ராகிம் வழங்கினார். இந்நிகழ்ச்சியை நிர்வாகக் குழு உறுப்பினர் முகமது சுபைர் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் கீழக்கரையில் உள்ள அனைத்து ஜமாஅத் நிர்வாகிகளும் அனைத்து இயக்க நிர்வாகிகளும் அனைத்து சமுதாய நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்களும் ஏராளமாக கலந்து கொண்டனர். இறுதியாக அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் உதவி செயலாளர் சீனி செய்யது இப்ராகிம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கு கீழக்கரை ஆய்வாளர் விஸ்வநாத் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com