கீழக்கரையில் விளையாட்டு மைதானம் திறப்பு……

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில் இளைஞர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் இல்லை எனும் பெருங்குறையை நீங்கிவிட்டது. கீழக்கரை மேலத்தெரு உஸ்வத்துன் ஹஸ்னா முஸ்லிம் சங்கம் நிற்வாகத்திற்கு உட்பட்ட ஹமீதியா பள்ளி மைதானத்தை, கீழக்கரை இளைஞர்கள் விளையாட அனுமதி அளித்துள்ளது. அதன்படி இன்று மாலை 4.30 மணியளவில் உஸ்வத்துன் ஹஸ்னா முஸ்லிம் சங்கத்தின் நிர்வாகிகள் தலைமையில் கீழக்கரையில் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் கீழக்கரை ஹமீதியா விளையாட்டு மைதானம் இளைஞர் விளையாடுவதற்காக திறக்கப்பட்டது.

இதற்கான கூட்டம் கீழக்கரை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் இன்ஜினியர் கபீர் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹமீது சுல்தான் சங்க நிர்வாகிகளுக்கும், இந்த விளையாட்டு மைதானம் திறப்பதற்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும் சால்வை அணிவித்து கௌரவ படுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஜமாத்தார்கள் அனைத்து சமுதாய தலைவர் கீழக்கரையில் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு