கீழக்கரையில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பிறந்தநாளை கீழக்கரை நாம் தமிழர் கட்சி சார்பாக நகர் செயலாளர் வாசிம் அக்ரம் தலைமையிலும்,  நகர் தலைவர் மன்சூர்தீன் முன்னிலையிலும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

பிரபாகரனின் பிறந்தநாளான இன்று புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டன. இதில் நகர் துணைத்தலைவர் யாசர் அரபாத், இணைச்செயலாளர் ஆதில், துணைச்செயலாளர் சபரி, பொருளாளர் சாகுல், இளைஞர் பாசறை ஆரிப், சுற்றுச்சூழல் பாசறை பாக்யராஜ், செய்தி தொடர்பாளர் அன்வர்ஷா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு