‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு

கீழக்கரை நகரின் பல இடங்களில், கடந்த வாரம் ‘ஈருலக வெற்றியை நோக்கி..’ என்கிற பெயரில் எந்த ஒரு அமைப்பு பெயரையும் குறிப்பிடாமல் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக வால்போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று ‘ஈருலக வெற்றியை நோக்கி’ என்கிற தலைப்பிட்டு ‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு செய்யப்பட்டு நோட்டிஸ் வெளியிடப்பட்டு உள்ளது.

பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் விதமாக பேச்சுப் போட்டி, குர்ஆன் மனனப் போட்டி, மதரஸா மாணவர்களுக்கான மாதிரி தயாரிப்பு போட்டி, இஸ்லாமிய வினாடி வினா போட்டி நடத்த பெற இருப்பதாகவும், போட்டிகளில் வெல்லும் மாணவர்களுக்கு இலட்சம் ரூபாய்க்கும் மேல் பரிசுத் தொகைகள் காத்திருப்பதாகவும் அறிவிப்பு செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும் இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயரை முன்பதிவு செய்ய ‘ஏப்ரல் 30, 2018’ கடைசி நாள் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் கடந்த வாரம் ‘ஈருலக வெற்றியை நோக்கி..’ என்கிற பெயரில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள காணொளி வீடியோ காட்சி.. 

உதவிக்கரம் நீட்டுங்கள்..