கீழை நியூஸ் ‘BLOOD APP’ அறிமுக விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது..

கீழக்கரை நகரில் அவசர கால இரத்த தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக இரத்த தானம் செய்ய விரும்பும் கொடையாளர்களும், இரத்தம் தேவைப்படுவர்களும் இலகுவாக சந்தித்து பயனடையும் வகையில் கீழை நியூஸ் சார்பாக ‘KEELAI NEWS BLOOD APP’ நேற்று (16.02.18) கீழக்கரையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான அறிமுக விழா நிகழ்ச்சி நேற்று இரவு 7 மணியளவில் ஆலீம் புலவர் பவாஸ் வணிக வளாக கட்டிடத்தில் இயங்கும் சினர்ஜி இன்டர்நெஷனல் கல்வியகத்தில் (முஸ்லீம் பஜார் பீஸா பேக்கரி மேல்தளம்) சிறப்பாக நடைபெற்றது.

இந்த ‘KEELAI NEWS BLOOD APP’ அறிமுக விழா நிகழ்ச்சியினை இஸ்லாமிய கல்வி சங்கத்தின் தலைவர், அல் பைய்யினா அகாடமியின் பேராசிரியர் சட்டப் போராளி ஆலீம் தவ்ஹீத் ஜமாலி கிராஅத் ஓதி துவங்கி வைத்தார். கீழை நியூஸ் நிறுவனரும், வடக்குத் தெரு சமூக நல அமைப்பு NASA-வின் முன்னாள் தலைவருமான செய்யது ஆப்தீன் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று தலைமை உரை ஆற்றினார். கீழை நியூஸ் சட்டப் போராளிகள் தள ஒருங்கிணைப்பாளர், மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் பொருளாளர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் வரவேற்புரை வழங்கி ‘KEELAI NEWS BLOOD APP’  குறித்த அறிமுக உரையினை, காணொளி வீடியோ காட்சிகள் மூலம் விளக்கினார்.

வாழ்த்துரையை SDPI கட்சியின் கீழக்கரை நகர் செயலாளர் ஹமீது பைசல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர் செயலாளர் சட்டப் போராளி ஹமீது யூசுப், கிழக்குத் தெரு ஜமாஅத் துணை பொருளாளர் சட்டப் போராளி முஹம்மது அஜிஹர், மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் செயற்குழு உறுப்பினர் சட்டப் போராளி பாதுஷா ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியின் நிறைவாக அல் பய்யினா மெட்ரிகுலேசன் பள்ளியின் தாளாளரும், இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட துணை தலைவருமான சட்டப் போராளி ஜாபீர் சுலைமான் நன்றியுரை வழங்கினார்.

இந்த நல்ல நிகழ்ச்சிக்கு ஜமாத்தினர், சமூகநல அமைப்பினர், பொதுநல சங்கத்தினர், சமுதாய இயக்கத்தினர், அரசியல் கட்சியினர் திரளாக வந்து கலந்து கொண்டு ‘KEELAI NEWS BLOOD APP’ அறிமுக விழா நிகழ்ச்சியினை சிறப்பித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் கீழை நியூஸ் நிர்வாகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

இந்த BLOOD APP செயலியை கீழே உள்ள இமேஜை க்ளிக் செய்து அல்லது QR CODEஐ, ஸ்கேன் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..

———————

2 Comments

Comments are closed.