Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் ..கால அவகாசம் கோரி அதிகாரிகள் சமரசம்

கீழக்கரையில் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் ..கால அவகாசம் கோரி அதிகாரிகள் சமரசம்

by mohan

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, மீன் கடை செல்லும் வழியில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தன. போதை தள்ளாட்டத்தில் சாலையில் நின்று ரகளை செய்யும் குடிமகன்கள், சாலை ஓரங்களில் படுத்து கிடக்கும் குடிமகன்களால் குடிமகன்மேலும் அரசு, தனியார் பஸ்கள் சென்று திரும்புவதில் சிரமம் தொடர்ந்தது. இதனால் இவ்விரு மதுக்கடைகளை அப்புறபடுத்தக்கோரி கீழக்கரையில் உள்ள பல்வேறு சமூக அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தன. மகளிர் அமைப்புகள் மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மாற்றிடம் அமைய ததால், நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து பல்வேறு சமூக நல அமைப்புகள் , அரசியல் கட்சியினர் கடந்த 6 மாதங்களாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர்.

இந்நிலையில், எஸ்டிபிஐ ., கட்சி இவ்விரு மதுக்கடைகளுக்கு நேற்று 01.09.19 பூட்டும் போராட்டம் அறிவித்தது. இதன் எதிரொலியாக, நேற்று 01.09.19 மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்ட 2 கடைகளும் மதியம் 2 : 30 மணியளவில் மீண்டும் மூடப்பட்டன. கடைகள் முன் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி போராட்டத்தை விலக்கி கொள்ள அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். இதன்படிஎஸ்டிபிஐ., கட்சி மாவட்ட தலைவர் எம்.ஐ. நூர் ஜியாவுதீன் தலைமையில் நிர்வாகிகள் கூடி விவாதித்தனர். கீழக்கரை தாசில்தார் சிக்கந்தர் பபீதா,காவல் துணை கண்காணிப்பாளர் முருகேசன்,டாஸ்மாக் தாசில்தார்சிரோன் மணி காவல் ஆய்வாளர்கள்பிச்சை மணி (கீழக்கரை), அனிதா (சிக்கல்) ஆகியோர், எஸ்டிபிஐ., கட்சி மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன், துணை தலைவர் சோமு, தொகுதி தலைவர் அசன் அலி, பேச்சாளர் ஜமீல், நகர் தலைவர் ஹமீது பைசல், ஊடகத் தொடர்பாளர் அப்துல் வஹாப் ஆகியோரிடம் சமரசம் பேசினர். எஸ்டிபிஐ., கட்சிமாவட்ட தலைவர் நூர்ஜியாதீன் கூறுகையில், கட்சி நிர்வாகிகளுடன் முடிவின் 04.9.19 அன்று மீண்டும் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவெடுக்கப்படும். மாற்றிடத்தில் மதுக்கடையை கொண்டு செல்ல டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒரு மாதம் அவகாசம் கோரியுள்ளார். இந்த உறுதி மொழியை ஏற்று இன்ரைய போராட்டம் தற்காலிமாக விலக்கி கொள்ளப்படுகிறது என்றார். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!