Home செய்திகள்மாநில செய்திகள் குமரியில் 2வது நாளாக கடல் சீற்றம்: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி; உறவினர்கள் வீட்டில் தஞ்சம்..

குமரியில் 2வது நாளாக கடல் சீற்றம்: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி; உறவினர்கள் வீட்டில் தஞ்சம்..

by Askar

குமரியில் 2வது நாளாக கடல் சீற்றம்: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி; உறவினர்கள் வீட்டில் தஞ்சம்..

குமரியில் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டது. கடலில் சுமார் 10 அடி உயரம் வரை ராட்சத அலைகள் எழுந்து பாறைகளில் மோதி சிதறின. கடல் சீற்றத்தால் முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதுபோல் சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டது.

குமரியில் இன்று மீண்டும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் சீற்றத்தால் அச்சமடைந்த கடற்கரையோர பகுதி மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பாக தங்களது உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

கடல் சீற்றத்தால் மணற்பரப்பில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 10 பைபர் வள்ளங்களை கடல் அலை இழுத்து சென்றது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!