இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -32
(கி.பி 1299-1922)
ஹங்கேரிக்கு படைஎடுக்க முடிவு செய்து படைகளை தயார் செய்து கொண்டு இருந்தபோதே கால்களில் நடக்க முடியாமல் பேரரசர் சுலைமான் அல் கானூனி மிகவும் சிரமப்பட்டார்.
ஒருவாறு ஹங்கேரி படையெடுப்பு வெற்றி அடைந்து அடுத்த பகுதிக்கு முன்னேற முயன்றபோது, மன்னர் திடீரென நடக்கமுடியாமல் கீழே சரிந்தார்.
பரிசோதித்த மன்னரின் மருத்துவ குழுவினர் மன்னருக்கு கீழ்வாதநோய் முற்றிவிட்டதை அறிந்து அதனால் நடக்கவும் முடியாமல் கடுமையான வலியில் அவதிப்படுவதைப் பார்த்து கை பிசைந்து நின்றனர்.
அந்த காலைப்பொழுதில் மன்னரின் கூடாரத்தில் கூட்டம் கூடிவிட்டது.
படைத்தலைவர்களும், அமைச்சர் பெருமக்களும், கவலையுடன் நின்று கொண்டு இருந்தனர்.
மன்னர் காலையிலிருந்து எழவில்லை என்பதையறிந்த மருத்துவர்கள் எவ்வளோ சிகிச்சை அளித்தும் அந்த உலகமகா பேரரசரின் உயிர் 1566 ஆண்டு மதிய வேளையில் பிரிந்தது.
46 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்து தனது 74 ஆவது வயதில் மரணித்த மன்னரின் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டது.
இவரது ஆட்சியில் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களில் பரவியிருந்த உஸ்மானிய ஆட்சியின் எல்லைக்குள் 1கோடியே 50 இலட்சம் மக்கள் அன்றைய 1550 ஆண்டுகளில் வாழ்ந்தனர்.
இவரின் காலத்தில் சிறப்பாக அறிஞர்களால் குர்ஆன்,ஹதீஸ் மற்றும் இவைகளில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட ஹனபி சட்டங்கள் மிகச்சிறந்த சட்டங்களாக வழிகாட்டல்களாக திகழ்ந்தது.
ஐரோப்பிய நாடுகளே இந்த சட்டங்களை பின்பற்றி வரி,வருவாய், நில சீர்திருத்தங்கள், விவசாய சட்டங்கள் என பல சட்டங்களை எடுத்துக்கொண்டன.
அதனாலேயே பேரரசர் சுலைமான் அவர்கள் “அல்கானூனி” என்ற சிறப்பு பெயரை சேர்த்து அழைக்கப்பட்டார்.
அமெரிக்க செனட் சபையில் தொங்க விடப்பட்டுள்ள சிறந்த சட்டங்களை உருவாக்கிய அறிஞர்களின் பட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றுள்ளது.
உஸ்மானிய பேரரசர் சுலைமான் அல்கானூனி அவர்களின் மரணத்திற்கு பிறகு உஸ்மானிய பேரரசின் வீழ்ச்சி ஆரம்பம் ஆனது.
இதற்கு பிறகு பல உஸ்மானிய அரசர்கள் ஆட்சி செய்தும் குறிப்பிடத்தக்க சிறப்புகள் ஏதுமில்லை.
ஐரோப்பாவில் புரட்சி வெடித்தது.அதனால் உலகின் பல பாகங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தது.
இங்கிலாந்தில் விக்டோரியா மகாராணியும், பிரான்சில் ஹென்றி வம்ச மன்னர்களும் இந்தியாவில் அக்பரும் ஆட்சி செய்தனர்.
ஐரோப்பாவில் பழைய கிறிஸ்தவ மதம் ரோமன்கத்தோலிக் எனவும்,புதிய புரட்சியாளர்களின் கிறிஸ்தவம் புரோட்டா ஸ்டெண்ட் எனவும் அழைக்கப்பட்டது.
சர்ச் மற்றும் கல்விக்கூடங்கள் மதபோதகர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
போப் முழு கிறிஸ்தவ உலகையும் கட்டுப்படுத்தினார். கிறிஸ்தவ நாடுகளின் மன்னர்களும் போப்பிற்கு கட்டுப்பட்டனர்.
பைபிளுக்கு எதிரான எந்த சிந்தனையும் இருக்கக்கூடாது என்று பாதியார்கள் போதித்தனர். அதனால் நவீன கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்க மறுத்தனர்.
அப்போது ஐரோப்பிய கிறிஸ்தவ உலகில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று ஏற்பட்டது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
You must be logged in to post a comment.