Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள மேதலோடை நாடார் மகாஜன சங்கம் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா…

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள மேதலோடை நாடார் மகாஜன சங்கம் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா…

by ஆசிரியர்

பெருந்தலைவர்  காமராஜர் அவர்களின் 116 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் உத்தரவுப்படி இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள மேதலோடை நாடார் மகாஜன சங்கம் உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. பெருந்தலைவரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு  மாணவ மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.  

இப்பள்ளியில் படித்து கடந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற சரஸ்வதி, இரண்டாமிடம் பிடித்த திவ்யதர்சினி, மூன்றாமிடம் பிடித்த மன்ஷா மற்றும் தமிழக ஆளுனரிடம் ராஜ்ய புரஸ்கார் விருது பெற்ற நிரஞ்சனாதேவி ஆகியோர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன பின்னர் கல்வியின் அவசியத்தை வலியுருத்தியும் சுற்றுப்புர சூழலை பாதுகாக்க வலியுருத்தியும் காமராஜரின் புகழை பரப்பும் பேரணியும் நடைபெற்றது. இதில் பெருந்தலைவரின் சாதனைகள் அடங்கிய பதாதைகளை மாணவ மாணவிகள்  ஏந்தி கிராமங்ளை சுற்றி வந்தனர்.பின்னர் கலைநிகழ்ச்சிளும் நடைபெற்றது. உயர்நிலை பள்ளி தலைமை  ஆசிரியர் முனியசாமி  தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் ஆசிரியர். ஆசிரியைகள்  பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தினகர்ராஜ் மேதலோடை தெற்கு கிராமத் தலைவர் துரைச்சாமி , முருகேசன், முனியான்டி செல்லமுத்து, வேலு, கோவிந்தன் உள்ளிட்ட சுற்று பகுதி கிராம முக்கியஸ்தர்கள் ஏராளமானோர் இந்நிகழ்சியில் பங்கேற்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!