Home செய்திகள் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் கொண்டாட்டம்: ராமேஸ்வரத்தில் மராத்தான் ஓட்டம்..

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் கொண்டாட்டம்: ராமேஸ்வரத்தில் மராத்தான் ஓட்டம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம், செப்.12- முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த நாளை (அக்.15) முன்னிட்டு ராமேஸ்வரத்தில் மாரத்தான் போட்டி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. மாரத்தான் போட்டிக்குரிய ஏ.பி.ஜே.அப்துல் கலாம் உருவம் பொறித்த லோகோவை  மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன்  வெளியிட்டார். 

ஆட்சியர் கூறுகையில், அப்துல் கலாமின் சாதனைகளை நினைவு கூறும் வகையில் அவரது பிறந்த நாள் அக்.15 தேசிய மாணவர் தினத்தன்று சிறியவர் முதல் பெரியவர் வரை ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டி அப்துல் கலாம் நினைவிடத்திலிருந்து துவங்கி பாம்பன் மேம்பாலம் வரை 21 கி.மீ வரை ஒரு போட்டி, நினைவிடம் முதல் தங்கச்சிமடம் வரை 5 கி.மீ தூர ஒரு போட்டி என 2 கட்ட போட்டி நடைபெறுகிறது. 21 கிமீ தூர போட்டியில் பங்கேற்க ரூ.750ம், 5 கிமீ தூர போட்டியில் பங்கேற்க ரூ.500 செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். போட்டியில் 500 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவதால் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் https://www.townscript.com/e/kalam-half-mrathan-24420 என்ற இணைத்தில் 80980 30808 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இப்போட்டியில் பங்கேற்க உள்ளோருக்கு டி-சர்ட், தொப்பி, புரத உணவுப் பொருள் வழங்கப்படும். போட்டியில் முதலிடம் பிடிப்பவருக்கு பதக்கம், பாராட்டு சான்று, காசோலை வழங்கப்படும். கலாமின் சாதனைகளை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள உங்கள் கனவுகளுக்காக ஓடுங்கள்” என்பதே இந்த ஓட்டத்தின் உள்நோக்கம்  ஆகும். மாநில அளவில் துவங்கப்படும் இப்போட்டி வரும் காலத்தில் அப்துல் கலாம் பிறந்த நாளில் நாடே பார்க்கும் வகையில் ராமேஸ்வரத்தில் பல்வேறு சாதனை விழாக்கள் நடைபெறும் வகையில் இந்த விழா முன்னேற்றமாக திகழ வேண்டும். இதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப், உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com