திருவாடானையில் இருந்து கஜா புயல் நிவாரணப் பொருட்கள் ..

இராமநாதபுரம் மாவட்டம்  திருவாடானை தாலுகா வட்டார மக்கள், வியாபாரிகள் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினர். அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ரூ. 50,000 மதிப்புள்ள அரிசி துணி வழங்கினார். அதேபோல் வியாபாரிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், ஜமாத்தார், அரிசி மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கொசுவர்த்தி, போர்வை துணி உள்பட ரூ.5, 30, 880 மதிப்புள்ள பொருட்களை வழங்கினர்.

இது குறித்து திருவாடானை தாசில்தார் சேகர் கூறியபோது கிராம நிர்வாக அலுவலர் அடங்கல் நகல் வழங்கி கொண்டிருந்தபோது பாதிக்கப்பட்டவர்களுக்கு உங்களால் இயன்ற பொருட்களை வழங்க கேட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரம் வட்டாணத்தைச் சேர்ந்த ஒரு பெண் தன் வீட்டிலிருந்த ஒரு மூடை அரிசியை தனது சைக்கிளில் வைத்து கைக்குழந்தையை மற்றும் தனது குழந்தையுடன் கொன்டு வந்து நிர்வாக அலுவலகம் வழங்கினார். அவரை பாராட்டுவதில் பெருமிதம் கொள்கிறேன். பொதுமக்களும் பல்வேறு தரப்பில் உதவிகள் செய்தனர். இப்பொருட்களை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் படி புயல் பாதித்த பகுகு அனுப்பி வைக்கப்படும் என்றார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க விரும்புவோர் திருவாடானை தாலுகா அலுவலகத்தை எந்த நேரத்திலும் அணுகி அதிகாரிகளிடம் பொருளாகவோ பணமாகவோ வழங்கலாம் என தெரிவித்தார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.