Home செய்திகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..

by ஆசிரியர்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சந்தீப் நந்தூரிää இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஓய்வூதிய இயக்குநர், நிதித்துறை கூடுதல் செயலாளர் திரு.ஜெ.கைலைநாதன் அவர்கள் ஓய்வூதியதாரர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். ஓய்வூதியர்களுக்கு சேர வேண்டிய நிலுவைத்தொகை மற்றும் பணப்பலன்களை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:-ஓய்வூதியதாரர்களின் குறைகளை மனுக்களாகப் பெற்று அவற்றை விரைந்து நிவர்த்தி செய்வதற்காக ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் 4 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. 30 தினங்களுக்கு முன்பே ஓய்வூதியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவைகள் இக்கூட்டத்தில் நிவர்த்தி செய்திட நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில் இன்று நடைபெறும் கூட்டத்திற்கு 97 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 28 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 56 மனுக்கள் நடவடிக்கையில் உள்ளது. பல ஆண்டுகள் பணி செய்து ஓய்வு பெற்றவர்களின் குறைகளை அலுவலர்கள் கவனத்துடன் பரிசீலித்து விரைந்து அவைகளை தீர்த்து வைக்க வேண்டும் என பேசினார்.

தொடர்ந்து ஓய்வூதியர் 2 நபர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட மருத்துவ செலவினத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். ​இக்கூட்டத்தில் துணை இயக்குநர் (ஓய்வூதியம்) திரு.மதிவாணன், மாவட்ட கருவூல அலுவலர் திருமதி பாமினிலதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு ) திருமதி கிறிஸ்டி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!