Home செய்திகள் இப்படி இருந்தவர் இப்படி ஆனார்.காட்பாடி காவல்துறையினரின் மனிதாபிமானம்.

இப்படி இருந்தவர் இப்படி ஆனார்.காட்பாடி காவல்துறையினரின் மனிதாபிமானம்.

by mohan

ஹைதராபாத்தை சேர்ந்த சையத் பாஷா (87) இவர் கடந்த 43 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும் Uத்தை பிரிந்து ரயில் மூலம் காட்பாடி வந்து சேர்ந்தார் பின்பு ஆங்காங்கே சுற்றி திரிந்தார். காந்தி மீது பற்றுக் கொண்ட அவர் காந்தி போல் வேஷம் போட்டு ஆங்காங்கே மற்றவர்கள் கொடுக்கும் பணத்தை வைத்து சாப்பிட்டு வந்தார்.காட்பாடி கிளி தாண் பட்டறை ரயில்வே 2 கண் மேம்பாலத்தின் கீழ் தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.தினமும் காந்தி போல் வேடம் யிட்டு உடல் முழுவதும் வெள்ளை வர்ணம் அடித்து மழை வெய்யில் என்று பாராமல் காந்தி போல் கண்ணாடி , கையில் தடி, ஒரு பை மாட்டிக் கொண்டு முக்கிய சாலையில் நின்று கொண்டு இருப்பார். அவருக்கு பரிதாப பட்டு பணம் கொடுப்பார்கள் அவர் யாரிடமும் பிச்சை கேட்டு பணம் வாங்கியது கிடையாது. அவரிடம் போட்டோ மற்றும் செல்வி எடுத்து கொண்டு ஏதாவது பணம் கொடுப்பார்கள். சுதந்திர தினம், குடியரசு தினங்களில் பொதுமக்கள் அவருக்கு கைகொடுத்து செல்வார்கள். வேலூர் மாவட்டம் முழுவதும் சென்றாலும் காட்பாடிக்கு வந்து விடுவார் இந்த காந்தியவாதி .காட்பாடி வழியாக பணக்காரர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் Uத்திரிக்கையாளர் பலர் பார்வைக்கு தினமும் அவர் பட்டாலும் யாரும் உதவவில்லை. ஏன் சமூக ஆர்வலர்களூம் இதற்கு விதிவிலக்கல்ல.ஆனால் காவல் ஆய்வாளர் புகழ் கண்ணில் பட்டார் இந்த பாஷா உடனே புகழ் உத்தரவுப்படி உதவி ஆய்வாளர் மனோகரன் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பாபு முத்துக்குமார் ஆகியோர் இவரை மீட்டு அறிவுரை கூறி புத்தாடை அணிவித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். சையத் பாஷாவை அவரது சொந்த ஊரான ஹைதராபாத்தில் உள்ள உறவினர்களிடம் காட்பாடி காவல்துறை ஒப்படைக்க உள்ளது.காட்பாடி காவல்துறையினரின் இந்த மணிதா விமான செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!