கபடி போட்டி : முதல் பரிசை வென்ற தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் அணி : S.P. முரளி ரம்பா பாராட்டு..

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட இளைஞர்கள் அடங்கிய 60 குழுக்கள் பங்கேற்ற பொங்கல் விழா கபடி போட்டியில் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் அணி பங்கேற்று முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றது.வெற்றி பெற்ற வீரர்களை தூத்துக்குடி மாவட்ட S.P. முரளி ரம்பா பாராட்டினார்.

பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு மாபெரும் மின்னொளி கபாடி போட்டி கடந்த 17. 1.2019 மற்றும் 18. 1.2019 ஆகிய இரு நாட்கள் செய்துங்கநல்லூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட இளைஞர்கள் அடங்கிய 60 குழுக்கள் போட்டியில் பங்கேற்றனர்.

இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் கபாடி குழுவும் பங்கேற்று முதலிடத்தைப் பிடித்து வெற்றி பெற்றது. முதல் பரிசான ரூபாய் 20 ஆயிரத்தையும் அதற்கான சுழற்கோப்பையும் பெற்றனர். வெற்றி பெற்ற ஆயுதப்படை காவலர்கள் அனைவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா பாராட்டினார்.

இந்நிகழ்வின்போது ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் சகாய ஜோஸ், ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் மாரியப்பன் மற்றும் காவல் ஆய்வாளர் கிருஷ்மூர்த்தி மற்றும் தனிப்பிரிவு ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி