இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 27/07/2017 (வெள்ளிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்பு சந்தை…

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புத் துறையால் தமிழ் நாட்டிலுள்ள படித்த வேலைநாடும் அனைவருக்கும் அரசு சார்பு நிறுவனங்களில் பணியமர்த்தம் செய்ய இயலாததாலும்,  தனியார் துறை வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டும், படித்த வேலைநாடுனர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்து, அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றவும், தமிழக அரசின் வேலைவாய்ப்புத்துறையால் ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் தனியார் வேலைவாய்ப்பு சந்தை ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோன்று ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.  மேற்கண்ட தனியார் வேலைவாய்ப்பு சந்தை இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இம்மாதம் 27.07.2018 முதல் ஒவ்வொரு வெள்கிக்கிழமை அன்றும் காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இத்தனியார் வேலைவாய்ப்பு சந்தையில் மருத்துவ துறையைச்சார்ந்த தனியார் முன்னனி நிறுவனங்கள் கலந்துகொண்டு டிப்ளமோ இன் பார்மசி, டிப்ளமோ இன் நர்சிங் மற்றும் டிப்ளமோ இன் லேப் டெக்னிசியன் கல்வித்தகுதியுடைய பதிவுதாரர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

மேலும் இராமநாதபுரத்தி;ல் உள்ள தனியார் முன்னனி நிறுவனங்கள் கலந்துகொண்டு டிப்ளமோ இன் டிடிபி, அனைத்து பட்டதாரிகள் மற்றும் எம்.பி.ஏ  கல்வித்தகுதியுடைய பதிவுதாரர்களை தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள் இவ்வேலைவாய்ப்பு சந்தையில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் தங்களின் சுய விபரங்களடங்கிய விண்ணப்பம், மார்பளவு புகைப்படம் ஐந்து (5), அனைத்து அசல் கல்விச்சான்றுகள்ää ஆதார் அட்டை மற்றும் ஒளி நகல் (ஜெராக்ஸ்)களுடன் நேரில் ஆஜராகி பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது.

இவ்வேலைவாய்ப்பு சந்தையின் மூலம் பணியமர்த்தம் செய்யப்படுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது எனவும் அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.