
காந்திஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு ஜித்தா பன்னாட்டு இந்திய காங்கிரஸ் சார்பாக கடந்த (2-10-20) அன்று ஸ்டார் உணவகத்தில் கருத்தரங்கு நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்ட தமுமுக ஜித்தா மேற்கு மண்டல பொறுப்பாளர் அப்துல் மஜீத், இந்தியாவிற்கு உமர் (ரலி) அவர்களைப் போன்ற தலைவரே தேவை என்று காந்திஜி தனது கட்டுரையில் எழுதியிருந்ததை நினைவு படுத்தினார்.
மேலும் பாசிசத்தின் பிடியிலிருந்து நம் இந்திய நாட்டை விடுவிப்பதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு அர்ப்பணிப்புடன் செயல்பட வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியை ஜித்தா பன்னாட்டு இந்திய காங்கிரஸ் துணை தலைவர் சிராஜ் மற்றும் பொது செயலாளர் கமர் ஸாதா சிறப்பாக நடத்தினார்கள்.
இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.