மதுரையில் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து தகுதிச் சான்றிதழ் வழங்கும் பணி நடைபெறுகிறது…

மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் காளைகளுக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் பணி ஜனவரி 2-ம் தேதியிலிருந்து 12, ஆம் தேதி வரை, அரசு கால்நடை மருத்துவர்களால் வழங்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியின் விதிமுறை குறித்து மதுரை பழங்காநத்தம் கால்நடை மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜெயகோபி கூறியதாவது: போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளின் உயரம் 120, சென்டி மீட்டர்க்கு குறைவாக இருக்கக்கூடாது. கொம்புகளின் முனை கூர்மையாக இருக்க கூடாது ஒடிந்திருக்க கூடாது. காளைகள் நோயுற்ற நிலையிலோ, உடல் சோர்ந்தோ, தண்ணீர் தாகத்தாலோ அல்லது அதிகப்படியான மிரட்சியுடனோ காணப்படக் கூடாது. காளைகளுக்கு ஊக்க மருந்தோ அல்லது மது புகட்டி இருக்கக்கூடாது. காளைகளுக்கு லாடம் கட்டி இருக்க கூடாது. காளைகளை வாடி வாசலுக்கு அனுப்புவதற்கு முன் மூக்கணாங்கயிறு அறுக்கப்பட வேண்டும். காளையின் உடம்பில் எண்ணெய் மற்றும் இதர வண்ணப்பூச்சுகள் இருக்கக்கூடாது. காயமடைந்த காளைகள் போட்டியில் கலந்து கொள்ள முடியாது. பங்கேற்கும் காளைகளின் வயது மூன்று வயதிற்கு மேற்பட்டதாகவும், 15 வயதிற்கு உட்பட்ட தாகவும் இருக்க வேண்டும். இதில் ஏதும் குறை இருந்தால் போட்டியில் பங்கேற்க தகுதி இல்லாதவையாக கருதப்படும்” என  அவர் கூறினார்.

செய்தி:- கனகராஜ், மதுரை