Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -3

கப்ளிசேட்

உஸ்மானிய பேரரசு -4

( கி.பி 1299-1922)

மன்னர் உஸ்மானின் எளிய மாளிகையில் மருத்துவர்கள் சூழ்ந்து இருந்தனர். நாடித் துடிப்பு குறைந்து கொண்டே வந்தது. நினைவுகள் விட்டு விட்டு வந்தது.

மன்னருக்கு காதுகளில் சில ஒலிகள் ரிங்காரமிட்டது.

அரசை, மக்களை நேசித்த ஒரு ஆட்சிதலைவருக்கு இறுதிநிலையிலும் அதே மனநிலையே இருந்தது.அவரின் பேரரசின் துவக்க காலங்களும் தனது தாத்தா தனக்கு சிறுவயதில் கூறிய நிகழ்வுகளும் மனதில் கண்ணாடி போல் ஜொலித்தன.

தனது மகன் உர்கானை அருகில் அழைத்து தனது சாம்ராஜ்யம் கட்டமைக்கப்பட்ட வரலாற்றை கூறினார்.

மங்கோலியர்களின் அட்டூழியங்களுக்கு அஞ்சி தனது நான்கு மகன்களுடன் அவ்கூஸ் இனக்குழு தலைவர் சுலைமான் அவர்கள் துருக்கியின் காண்ஸ்டாண்டி நோபுள் (இன்றைய இஸ்தான்ஃபுல்) நோக்கி கிளம்பினார்.

இடையில் ஆற்றைக் கடக்கும் போது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சுலைமான் அடித்து செல்லப்பட்டு மரணமடைந்தார்.

சுலைமானின் அவ்கூஸ் மக்களும், அவரது நான்கு மகன்களும் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதில் இரண்டு மகன்கள் மீண்டும் தங்களது பழைய பிரதேசத்திற்கே திரும்பி சென்றுவிட்டனர்.

இரண்டு மகன்கள் முடிவெடுத்தபடி, காண்ஸ்டாண்டி நோபுள் அருகில் செல்ஜூக்கியர் களின் ஆட்சிப் பகுதியில் குடியேறினர்.

சுலைமானின் மூத்த மகன் அர்த்தக்கரல் தனது குழுவினருக்கு போர் பயிற்சி அளித்து செல்ஜூக்கிய மன்னர்களுக்கு உதவி செய்ய அதற்குப் பரிசாக செல்ஜூக்கிய மன்னர் அளித்த பரிசே சகூதார் துமானிச் நகரமாகும்.

அதில் தனது தந்தை அர்த்தக்கரல் தனக்கு போர்க்கலைகளை கற்றுக் கொடுத்தது என உஸ்மானின் நினைவலைகள் சுழன்றது.

உஸ்மான் தனது மகன் உர்கானிடம் தங்கள் இனத்தின் வீரவரலாற்றை கூறி, மகனே! நீயும் சிறந்த மன்னராக ஆட்சி செய்!

மக்களிடம் அதிக வரி வாங்காமல் மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்து.

எல்லா மக்களோடும் இணக்கமாக அரவனைத்து ஆட்சிசெய்.

நான் நிர்மாணித்த இந்த உஸ்மானிய சாம்ராஜ்யம் முழு உலகத்தையும் ஆளவேண்டும்.

முஸ்லீம்கள் இந்த உலகின் ஆட்சியாளர்களாக நல்ல‌முறையில் ஆட்சி செய்யவேண்டும் என்று கூறி வந்தவருக்கு மூச்சி வாங்க ஆரம்பித்தது.

மன்னருக்காக மருத்துவர்கள் பலவாறான மருந்துகளை தயார்செய்து அவருக்கு சிறிதுசிறிதாக வழங்கி வந்தனர்.

மன்னரின் மாளிகையில் மருத்துவர்கள் அடங்கிய குழுவொன்று மன்னரை அருகில் இருந்து எல்லா நேரத்திலும் கவனித்து கொண்டது.

அவருக்கு முழு ஓய்வை அளிக்க மருத்துவர்கள் கூறியதால் அவரை யாரும் அருகில் செல்லாமல் மனைவி மல்காத்தூன் சிறப்பாக கவனித்து கொண்டார்.

உர்கான் தனது தந்தையின் அறிவுரைப்படி, ஐரோப்பாவிற்கு இஸ்லாமிய நெறிகளை எடுத்து சொல்ல ஒரு குழுவை அனுப்பி வைத்தார்.

ரோமப்பேரரசின் கீழ் இருந்த புருஷா நகரின் மன்னன் இந்த இஸ்லாமிய குழுவை சிறைபிடித்தான்.

பிறகு நடந்தது விநோதம்..!

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!