Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -3

கப்ளிசேட்

உஸ்மானிய பேரரசு -25

(கி.பி 1299-1922)

காண்ஸ்டாண்டி நோபிள் நகரத்தின் ரோமானிய சக்கரவர்த்தியின்
அரண்மனை உலகத்தின் சொர்க்கமாக இருந்தது.

அரண்மனையின் பிரமாண்டங்களும்
தங்கத்தால் இழைக்கப்பட்ட விதானங்களும்,
தூண்களும்,
பலவகை கற்கள் புதைக்கப்பட்ட,

ஆசனங்களும்,
கட்டில்களும்,
மெத்தென்ற பல்வகை விரிப்புகளும்,
அரண்மணையில்
கூண்டுகளில்
அடைக்கப்பட்ட
புலி,சிங்கங்களும்,

ஏராளமான பறவைகளும்,
நீருற்றுகளும்,
நதிகளில் இருந்து வெட்டப்பட்ட கால்வாய்களில்
நிறைந்து ஓடும் தண்ணீரும்,

சுவர்களின் இடையே
பதிக்கப்பட்ட கற்குழாயின் வழியாக வழிந்தோடும் நீரினால் ஏற்படும் குளிர்ச்சியும்,

பிரமாண்டமான அறைகளும்,
விதானங்களும்,
முற்றங்களும்,

மன்னரின் உடற்பயிற்சி கூடமும்,
அந்தப்புற அழகுகளும்,
என ஒரு புதிய உலகமே பூமியில் இருப்பதுபோல அதிசயித்துப் போனார் உஸ்மானிய பேரரசர் முஹம்மது அல் பாதில்.

அரண்மனை முழுவதும் கையகப்படுத்தப்பட்டு
மன்னரின் குடும்பம் குடியேறியது.

1000 வருட பராம்பரிய
ரோமானியர்களின் ஆட்சியை முஹம்மது அல் பாதில் முடிவுக்கு கொண்டு வந்தார்.

முஸ்லீம்களின் கனவாக இருந்த காண்ஸ்டாண்டி நோபிள் நகரம் எதிர்கால இஸ்லாமிய உலகின் கிலாபத் தலைநகராக கட்டமைக்க வேண்டும் என்று முஹம்மது அல்பாதில் உறுதி கொண்டார்.

துருக்கிய பேரரசு உஸ்மானிய பேரரசாக மாறியது.
காண்ஸ்டாண்டி நோபிள் உஸ்மானிய பேரரசின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.

காண்ஸ்டாண்டி நோபிள் வெற்றி கொள்ளப்பட்டதை அறிந்த முஸ்லீம்கள்,
உலகின் பல பாகங்களின் பள்ளிவாசல்களில்
சிறப்பு தொழுகையும்
பிரார்த்தனையும் நடத்தி கொண்டாடினார்கள்.

உலகின் முஸ்லீம் மன்னர்கள்‌ உஸ்மானிய பேரரசர்
முஹம்மது அல் பாதில் அவர்களுக்கு வாழ்த்து செய்திகள் அனுப்பினார்கள்.

துருக்கிய பேரரசில் முஸ்லீம்களிடம் ஜகாத் 2.5%வசூல் செய்யப்பட்டது.

முஸ்லீமல்லாத மற்ற மக்களிடம் ஜகாத்தைவிட மிகக்குறைந்த வரியே ஜிஸியா வரியாக
வசூலிக்கப்பட்டது.

வேறு எந்த வரிகளும் வசூலிக்காதால்
முஸ்லீம்களின் படையெடுப்பால் வெளியேறிய யூதர்களும்,
கிறிஸ்தவர்களும்
தாய் நாட்டிற்கே திரும்பினார்கள்.

மற்ற கிறிஸ்தவ நாடுகளில் மக்களை கசக்கி பிழிந்து வசூலிக்கப்பட்ட வரிவிகிதங்களாலும்
அதிகாரிகள், மதகுருமார்களின்
கெடுபிடிகளாலும்,
வெறுத்துப் போன
யூத , கிறிஸ்தவ மக்கள் காண்ஸ்டாண்டி நோபிள் நகரில் ஏராளமாக குடியேறினர்.

இங்கு அவர்களுக்கு
எல்லா உரிமைகளும்
குறிப்பாக மத வழிபாட்டு உரிமைகள் முழுமையாக வழங்கப்பட்டது.
தேவாலயங்கள் பாதுகாக்கப்பட்டன.

கிறிஸ்தவர்களும்,
யூதர்களும், ராணுவத்தில் பணிக்கு சேர்ந்தால் வரி செலுத்த தேவையில்லை.

இவர்கள் ராணுவத்தில் ஆபத்தான பிரிவுகளில் பணிபுரியத் தேவையில்லை.

இதுபோன்ற காரணங்களாலும்,
இன்றைக்கு ஜிஸ்யா வரியை பொய்யாக கட்டமைக்கிற பாசிசவாதிகளின்
கூற்றை சிதைக்கிறபடி
ஏராளமான யூத கிறிஸ்தவ மக்கள்
ஜிஸ்யா வரியால் கவரப்பட்டு துருக்கிய பேரரசின் பகுதியில் குடியேறினர்.

கிறிஸ்தவர்களுக்கு
முழு உரிமைகள் வழங்கப்பட்டன

முஹம்மது அல் பாதில் நிறைய நிர்வாக சீர்திருத்தங்களை செய்தார்.

முஹம்மது அல்பாதில் அவர்கள் நகரைச்சுற்றிவந்த போது ஒரு தேவாலயத்தை கண்டார்.
அதிசயித்து அப்படியே நின்று விட்டார்.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!