Home செய்திகள்மாநில செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி-3

கப்ளிசேட்

உஸ்மானிய பேரரசு-1

( கி.பி 1299-1922)

உஸ்மானிய பேரரசு என்பது நமது தாத்தா காலத்தில் முடிவடைந்த இஸ்லாமிய கிலாபத்தாகும்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு சிதைக்கப்பட்டு, முஸ்லீம்களை சிதறடித்து, முஸ்லீம்களின் தலைமைகளை சிதறடித்து, முஸ்லீம்களின் ஒற்றுமையை முடிவுக்கொண்டு வந்து,

வளமான உஸ்மானிய பேரரசை வட்டிக்கு கடன் வாங்க வைத்து தேசியம் என்ற பெயரில் முஸ்தபா கமால் பாட்சா என்ற மேற்கத்திய சிந்தனைகளை கொண்டவர் மூலம் துருக்கியின் கிலாபத்தை சிதைத்த சூழ்ச்சிகளையும் உஸ்மானிய கிலாபத்தின் ஆட்சியின் மாண்புகளையும் ஆராய்வோம்.

ரோமாபுரியின் அருகில் “சகூதார் துமானிச்” என்ற அழகிய சிறிய நகரம்.

அந்த இரவு நேரத்தில் வானத்தில் அன்று முழுநிலவு பளீரென பாலாக ஒளியை கொட்டியது.

அந்த அழகிய நகரத்தின் நதி ஓரத்தில் அடர்த்தியான பூஞ்சோலை.

ஏராளமான மரங்களும், பூத்து குலுங்கும் பூக்களுமாக அந்த சோலையெங்கும் நறுமணம் பரவி இருக்கிறது.

அந்த சோலையின் நடுவில் அழகான நீரூற்று பீறிட்டு மழைச்சாரலைப் போல பொழிகிறது.

அதன் அருகே தனது தோழிகளோடு ஒரு அழகிய பெண் தனது முழு உடலையும் மறைக்கும் அழகான உடை அணிந்து இரவுத் தொழுகையை தொழுது கொண்டு இருந்தார்.

அவரது தோழிகளும் அதுபோன்றே உடல் மறைத்த ஆடைகளுடன் தொழுது கொண்டு இருந்தனர்.

முழுநிலவின் ஒளியில் அந்தக்காட்சி சொர்க்கத்து ஹூர்லீன்களின் கூட்டம்ஒன்று அங்கு கூடியிருந்தது போல அந்த இடமே அழகுகளால் பிரகாசித்தது.

“அவ்கூஸ்” என்றழைக்கப்பட்ட கூட்டத்தின் தலைவரான அந்த இளைஞர் சற்று இளைப்பாற அந்த சோலையில் நுழைந்ததுமே இந்த அழகு கூட்டத்தால் வசீகரிக்கப்பட்டார்.

அந்த கூட்டத்தின் நடுவிலிருந்த பெண்ணின் முகச்சீலை சிறிது விலக அவளின் அழகில் ஈர்க்கப்பட்டார்.

அந்த பேரழகியும் தலை தூக்கி திரும்பி பார்த்தபோது, சிறிது தூரத்தில் வீரர்களின் கூட்டம் ஒன்றும், அதில் நடுவில் தனித்து பளீரென தெரிந்த இளைஞரின் வசீகரமும் அவளுக்குள் புன்னகையை மலரவைத்தது.

அந்த இளைஞர் தனது வீரர்களிடம் அந்த அழகிகள் கூட்டத்தை யாரென விசாரித்துவர தனது நண்பரும் கவிஞருமான அஹமதுவிடம் சொல்லிவிட்டு தனது மாளிகைக்கு திரும்பினார்.

தனது பஞ்சணையில் படுத்துக்கொண்டு கண்களை மூடிய போது அந்த அழகியின் அழகு உருவம் கண்களுக்குள் புகுந்து இதயத்தை வருடியது.

தனது கவனத்தை திருப்ப தனது “அவ்கூஸ்”கூட்டம் அந்த நகரை கைப்பற்றிய வரலாற்றை தனது மனத்திரையில் காட்சிப்படுத்தினார்.

தனது வீரர்களுடன் தனது தந்தை அர்த்தக்கரலுடன் தங்குவதற்கான பிரதேசத்தை தேடி நாடோடிகளாக வந்தபோது இரு பிரிவினர் போர் செய்ய தயாராக இருந்தனர்.

அதில் ஒரு கூட்டம் அதிக வீரர்கள் மற்றும் ஆயுதங்களுடன் முரட்டுத்தனமாக காட்சி அளித்தனர்.

அதன் எதிரிலிருந்த படை, எண்ணிக்கையில் குறைவாகவும் பார்ப்பதற்கு பலம் குன்றியும் இருந்தது.

எதோ ஒரு ஈர்ப்பில் அர்த்தக்கரல் பலம் குன்றிய படையோடு இணைந்து எதிரிப் படையோடு போர் செய்து இறுதியில் வெற்றி பெறுகின்றனர்.

வெற்றிக்கு காரணமான அந்தப்படையின் தலைவர் அர்த்தக்கரலை பாராட்டி, அந்தப்பகுதியை போர்பரிசாக வழங்கினார் அந்த செல்ஜுக்கிய மன்னர்.

அப்போதுதான் தாங்கள் இணைந்து போரிட்ட படை அந்தப்பகுதியின் ஆட்சியாளர்களின் செல்ஜுக்கிய படை என்பதும் எதிர்த்து போரிட்ட படை பல அட்டூழியங்களை புரிந்த மங்கோலியர்களின் படை என்பதும் புரிந்தது.

மனதில் அடுத்தடுத்த நிகழ்வுகள் காட்சிகளாக விரியத் துவங்கியது.

இதற்கிடையில் அந்த அழகிய பெண்களின் கூட்டத்தை விசாரித்து வந்து கவிஞர் அஹ்மது சொன்ன பெயர் இளைஞருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!