Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -3

கப்ளிசேட்

உஸ்மானிய பேரரசு -34

(கி.பி 1299-1922)

கிறிஸ்தவ மதமே மதகுருமார்களிடம் சிக்கி சீரழிந்து இருந்தது.

போப் கிறிஸ்தவ மன்னர்களை கட்டுப்படுத்தினார். மன்னர்களுக்கு உத்திரவு போப்பிடமிருந்து சென்றது.

இதனை பயன்படுத்திக் கொண்ட கிறிஸ்தவ பாதிரியார்கள் மன்னர்களின் உதவியோடு சொகுசாக வாழ்ந்தனர்.

மக்களை சுரண்டினர். உண்மையான பைபிள் மக்களை சென்றடையவில்லை. அறிவியல் கண்டுபிடிப்புகள்

தங்களுக்கு இடைஞ்சல் ஆகிவிடுமோ என்று எண்ணிய பாதிரியார்கள் புதிய கண்டுபிடிப்புகளை ஏற்க மறுத்தனர். ஆகவே ஐரோப்பா முழுவதும் அறிவு வறட்சியும் இருண்ட சூழலும் நிலவியது.

பாதிரியார்கள் விஞ்ஞானிகளை சாத்தான் கூட்டம் என்று அழைத்தார்கள்.

பைபிளை தங்கள் தோதுக்கு ஏற்ப பல பிழையான கருத்துக்களை கூறினார்கள்.

ஆனால் நேர்மாற்றமாக முஸ்லீம்களின் ஆட்சிப்பகுதியில் புதிய கண்டுபிடிப்புகள் ஊக்கப் படுத்தப்பட்டன. அறிவுப்புரட்சியாக இருந்தது.

ஏராளமான கண்டுபிடிப்புகளை முஸ்லீம்கள் நிகழ்த்தினர்.

பூஜ்யத்திற்கான மதிப்பு,அல்ஜீப்ரா, திசைகாட்டும் கருவி, கிடார்,கண்ணாடி குடுவைகள், விரிப்புகள், கப்பல்கள் உருவாக்கம்,

துப்பாக்கி,பீரங்கி, ராணுவ கட்டமைப்பு, அரசியல் அமைப்பு சட்டங்கள்,சமூக ஒழுக்கம்,சமூக கட்டுப்பாடு,

பொது மருத்துவமனை, பள்ளிவாசல்களில் மக்தப்கள், மதரசாக்கள், பல்கலைக்கழகங்கள், தெளிவான சட்டங்கள், நீதிமன்றம், குற்றவாளிக்கும் தனது கருத்தை கூறும் உரிமை,

பொது தங்குமிடம், பொது குளியலறை, பொது கழிவறைகள்,

உணவுகளில் பல புதியவகை உணவுகள், சூப் போன்ற பானங்கள்,

என அறிவியல், சமூகம்,ராணுவம்,நீதி, ஒழுக்கம்கல்வி, உணவு,ஆட்சித்திறன் போன்ற அனைத்து துறைகளிலும் முஸ்லீம்கள் உலகின் முதன்மை ஆனவர்களாகவும், முன்னணியிலும், முழு வழிகாட்டிகளாகவும், இருந்தனர்.

மார்ட்டின் லூதர் கிங் என்ற புரட்சியாளர் தோன்றினார். இவர் பாதியார்களின் பித்தலாட்டங்களை தோலுரித்தார்.

பைபிளை ஆய்வு செய்து பல கருத்துக்களை கூறினார்.அதில் அவரது கருத்துக்களையும் சேர்த்துகொண்டு கூறியதால், பைபிள் தனது தூய நிலையை இழந்தது.

மார்ட்டின் லூதர் கிங் ஏசுவை மட்டுமே வணங்கவேண்டும் பாவமன்னிப்பு உரிமை ஏசுபிரானுக்கு மட்டுமே உண்டு என்று கூறினார்.

கிறிஸ்தவ சீர்திருத்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இவரின் பிரச்சாரம் இளைஞர்களை கவர்ந்தது. ஏராளமான இளைஞர்கள் இவரின் பக்கம் சாய்ந்தனர்.

கிறிஸ்தவம் இரண்டாக பிளவு பட்டது. பழைய மதத்தை பின்பற்றியவர்கள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பட்டனர்.

மார்ட்டின் லூதர் கிங் உடன் இணைந்து அவரது கருத்துக்களை ஆதரித்தவர்கள் புரோட்டஸ்டெண்ட் (எதிர்ப்பாளர்கள்) எனவும் அழைக்கப்பட்டனர்.

இவர்கள் போப்பை தலைவராக ஏற்கவில்லை.

ஐரோப்பா முழுவதும் உள்நாட்டு போர் வெடித்தது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!