Home செய்திகள்மாநில செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -2

கப்ளிசேட்

அப்பாஸிய பேரரசு-9

(கி.பி. 750-1258)

பாக்தாதின் நிர்வாகியாக அறிவிக்கப்பட்ட அலிரிதா அவர்கள் பாக்தாதின் உண்மையான நிலவரத்தை பேரரசர் மாஃமூனுக்கு அறிவித்தார்.

அலிரிதா பேரரசர் மஃமூன் மீது நல்ல கருத்துக்கள் வரும்படி பாக்தாத்‌ நகரில் பல நல்ல செயல்களை தொடர்ந்து செய்தார்.

அலிரிதா அவர்கள் ஷியா சிந்தனையை பாக்தாதில் விதைத்தார். அதனால் ஷியாக்களின் ஆதிக்கம் பாக்தாத் நகரில் கொடிகட்டி பறந்தது.

ஷியாக்களின் ஆதிக்கத்தால் அப்பாஸியர்களின் பரம்பரை கருப்புக்கொடியின் நிறத்தை மன்னர் மஃமூன் பச்சை நிறமாக மாற்றினார்.

இந்த நிலையில் பத்லுஇப்னு சஹல் குளியலறையில் கொலை செய்யப்பட்டார்.

அலிரிதா அவர்களும் திடீர் மரணம் அடையவே மன்னர் மஃமூன் பாக்தாத் நகரை வந்தடைந்தார்.

சிரியா,ஈராக் போன்ற பகுதிகளில் கிளர்ச்சிகள் ஆரம்பமாயின. பல பிரதேசங்கள் சுயாட்சி பிரதேசங்களாக மாறின.

மஃமூன் கல்வி ஞானங்களில் மிக சிறந்தவராக திகழ்ந்தார். குர்ஆன்,ஹதீஸ், ஃபிக்ஹு, தத்துவக்கலை போன்றவற்றில் ஆழ்ந்த புலமை பெற்றவராக திகழ்ந்தார்.

கல்வியில் மிகச்சிறந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டது.

இவரது அரசவையில் இன பேதமின்றி எல்லா அறிஞர்களுக்கும் இடமளிக்கப்பட்டது. ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் அறிஞர்கள் ஒன்றுகூடி கலந்துரையாடல் செய்தார்கள்.

பைத்துல் ஹிக்மா மிகச்சிறந்த பல்கலைகழகமாக‌ செயல்பட்டது.

பைத்துல் ஹிக்மா மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு முதல் பகுதி பல்வேறு வகையான நூல்களை கொண்ட நூல் நிலையமாகவும்,

இரண்டாவது பகுதி பல்வேறு மொழிகளில் இருக்கும் சிறப்பான நூல்களை மொழி பெயர்க்கும் பகுதியாக இருந்தது.

நூல் நிலையத்தின் பொறுப்பாளராக ஹுனைன் பின் இசாக் என்பவர் சிறப்பாக பணியாற்றினார்.

மூன்றாவது பகுதி வானிலை ஆய்வு மையமாக செயல்பட்டது. வானிலை முன்னறிவிப்பு, வானிலை அட்டவணைகள் தயாரித்தல் என மிக சிறப்பாக செயல்பட்டது.

பேரரசர் மாஃமூனுக்கு அவரது தாயார் கைசுரான், மனைவி பூரான் பின் ஹயாத், ஆசிரியர் ஜஃபர் பர்மக்கி, அமைச்சர் பத்லுஇப்னு சஹல் அவரது சகோதரர் ஹஸன் இப்னு சஹல் ஆகியோர் மிகுந்த பக்க பலமாக இருந்தார்கள்.

மஃமூனின் காலத்தில் கல்வி, விவசாயம், தொழில்கள், கைத்தொழில்கள் என பேரரசு பெரும் வளர்ச்சி நிலையில் இருந்தது.

மன்னர் மஃமூன் நவீன சிந்தனை யாளராகவும், பகுத்தறிவு சிந்தனை யாளராகவும் இருந்தார்.பல காரணங்களால் முஃதஸிலா சிந்தனைகள் ஊடுறுவியது.

மஃமூனின் காலத்தில் ஹதீஸ் கலையில் இமாம் புகாரி, ஃபிக்ஹு கலையில் இமாம் ஷாபி, இமாம் அஹ்மது இப்னு ஹம்பல், வரலாற்று ஆசிரியர் இப்னுஹிஸாம், வாஹிதி,இப்னு ஹுதைபா, கவிஞர் அப்பாஸ், கணிதத்துறையில் குவாரிஜிமி, ஆகியோர் சிறப்பிற்குரிய வர்களாக இருந்தனர்.

மஃமூன் அரசின் கொள்கையாக முஃதஸிலா கொள்கை இருந்தது. முஃதஸிலா கொள்கை என்பது என்ன?

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!