Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -2

கப்ளிசேட்

அப்பாஸிய பேரரசு -21

(கி.பி 750-1258)

சிலுவைப் போருக்கான காரணங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

சிலுவைப்போர் என்பது இரண்டு நூற்றாண்டுகள் நடந்த மிக நெடிய போராகும். கி.பி 1097 துவங்கி 1291 வரை கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் தொடர்ந்து நடந்த நீண்ட நெடிய போராகும்.

இந்தப் போர்களுக்கு சமூக ரீதியான, சமய ரீதியான, அரசியல் ரீதியான, பொருளாதார ரீதியான, காரணங்கள் இருந்தது.

முஸ்லீம்களின் ஆட்சி ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா என்று பரவிக்கொண்டே இருந்தது.

ஆட்சியாளர்கள் இடையே ஆதிக்க போட்டிகள் அதிகரித்தன.

கிறிஸ்தவர்களின் கிரேக்க திருச்சபைக்கும், ரோமர்களின் திருச்சபைக்கும் இடையிலிருந்த அதிகாரப்போட்டி,

முஸ்லீம் மன்னர்கள் போரின் மூலம் கிறிஸ்தவ பிரதேசங்களை கைப்பற்றியது,

போர்கள் மூலம் முஸ்லீம்களுக்கு கிடைத்த சொத்துக்கள், இழப்பீடுகள்.

செல்ஜூக்கிய மன்னர் அல்ப் அர்ஸலான் காலத்தில் ரோமர்கள் தோற்கடிக்கப்பட்டு ரோமமன்னர் சிறைபிடிக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட வீரர்களுக்கு இழப்பீட்டு தொகை வாங்கியதுடன் செல்ஜூக்கிய முஸ்லீம்கள் ரோமப்பகுதியில் குடியேறினர்.

முஸ்லீம்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜெருசலேம், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் ஜெருசேலம் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

மத்திய தரைக்கடலின் பல தீவுகள் முஸ்லீம்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் மற்றவர்கள் வணிகம் செய்வதில் ஏற்பட்ட சிக்கல்கள்,

கடல்பகுதிகளில் முஸ்லீம்களின் வேடத்தில் வந்த கடற் கொள்ளைகாரர் களால் உருவான பிரச்சினைகள்,

இந்தக்காலத்தில் பாக்தாத்தை தலைமையிடமாக கொண்டு அப்பாஸிய ஆட்சியும்,

ஸ்பெயின் கொரடோவாவை தலைநகராக வைத்து உமைய்யாக்களும்,

எகிப்து ,பாரசீகப் பிரதேசங்களை மையமாக வைத்து செல்ஜூக்கியர்கள், பாத்திமியாக்கள், சலாவுதீன் அய்யூபி என்று முஸ்லீம் அரசுகளின் வளையங்களில் சூழப்பட்ட கிறிஸ்தவர்கள்,

தங்களின் பல நூற்றாண்டுகால ஆட்சிக்கு ஏற்பட்ட வீழ்ச்சிகள் கோபங்களாக மாறின.

300 கிருஸ்தவ மதகுருமார்கள் பிரான்ஸில் கி.பி 1095 ஆம் ஆண்டு ஒன்று கூடினார்கள். இது “கிளமெண்ட் மாநாடு ” என்று அழைக்கப்படுகிறது.

ஜெருசேலத்தை மீட்க ஒவ்வொரு கிறிஸ்தவரும் போரில் கலந்து கொள்ளவேண்டும்.

இந்தப் புனிதப் போரில் கலந்து கொண்டால் பாவங்கள் மன்னிக்கப்படும். சொர்க்கம் உறுதியாக கிடைக்கும். வரிகள் தள்ளுபடி செய்யப்படும் என்று பல்வேறு வகையில் கிறிஸ்துவ மக்களை ஒன்று திரட்டும் பணி துவங்கியது.

இதில் உட்ச கட்டமாக செயல்பட்ட பீட்டர் சந்நியாசியின் செயல் கிறிஸ்தவர்களின் வெறியைத் தூண்டியது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com