Home செய்திகள்மாநில செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -2

கப்ளிசேட்

அப்பாஸிய பேரரசு -17

(கி.பி 750-1258)

பாத்திமிய சிற்றரசு தனது ஆதிக்கத்தை ஆரம்பித்தது.இது எகிப்தை மையமாக கொண்டு இயங்கியது. இது முழுக்க சியா சிந்தனைகளை கொண்ட அரசாக இருந்தது.

அபூ முஹம்மது உபைதுல்லா அல்மஹதி மொரோக்கோ பகுதியில் இருந்த ஆட்சியாளரை தோற்கடித்து தனது அரசை ஆரம்பித்தார்.

கைரவான் பகுதியை வெற்றி கொண்டு அவர் தனது அரசை பாத்திமியாக்கள் அரசு என பிரகடனம் செய்தார்.எகிப்து அருகில் மஹ்தியா நகரை தலைநகராக கட்டமைத்தார்.

இவர் எகிப்தில் உள்நுழைய எவ்வளவோ முயற்சித்தும் உள்ளே நுழைய முடியவில்லை.

இவரின் ஆட்சி சிறப்பாக அடித்தளமிட்டது. இவரது மரணித்திற்கு பிறகு இவரது மகன் முஹம்மது அபுல் காசிம்,அல்காயிம், அம்ரில்லா என்று பெயர்களை சூட்டிக் கொண்டு ஆட்சிபீடம் ஏறினார்.

இரண்டு வருடங்களே ஆட்சி செய்த இவர் எகிப்தை கைப்பற்ற முயன்று முடியாமல் தோல்வியுற்றார். இவரும் மரணமடைந்தார்.

இவரது மகன் இஸ்மாயில் அபுத்தாஹிர் அல் மன்சூர் ஆட்சிபீடம் ஏறினார்.இவர் மன்சூரியா என்ற அழகிய நகரை வடிவமைத்தார்.

இவருக்கு பிறகு இவரது மகன் அல்முஹஜ்தீனுல்லா ஆட்சிபீடம் ஏறினார். அப்போது எகிப்தை வெற்றி கொள்ளும் சூழல்கள் உருவானது.

சிரியாவை ஆண்ட அக்தீசுகள் வீழ்ச்சி அடைந்தனர்.இவரை எகிப்தை வெற்றிகொள்ள தூண்டினர்.அப்போது எகிப்தில் பஞ்சம் நிலவியது.

இவரது அடிமையும் தளபதியுமான ஜவ்ஹர் அல் சக்கவி படையுடன் எகிப்திற்கு அனுப்பப் பட்டு எகிப்தை வெற்றி கொண்டார்.

எகிப்தில் அம்ரு இப்னு ஆஸ் பள்ளிவாசலில் குத்பா உரை நிகழ்த்தி இவர்களின் வெள்ளைக் கொடியை பறக்க விட்டார்.

கெய்ரோ நகரை பாக்தாத்தைப்போல அழகான நகராக பல மாற்றங்கள் செய்து கட்டமைத்தார்.

உலகப்புகழ்பெற்ற அல்அஷ்கர் பல்கலைக்கழகம் கி .பி 970 ஆம்ஆண்டுஆரம்பித்தது.இது மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் சனிக்கிழமை அன்று ஜவ்ஹர் அல் சக்கவி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

இவர் சிரியாவையும் வெற்றி கொண்டார். அலெக் சாந்திரியாவையும் வெற்றி கொண்டார்.

இவர் மக்களிடம் நாங்கள் ஆட்சி புரிய வரவில்லை.நல்ல கருத்துக்களை பரப்பவே வந்துள்ளோம் என்று பிரச்சாரம் செய்தார்.இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

சியா பிரிவின் ஒரு பிரிவான கராமதியாக்கள் ஹஸன் இப்னு அஹ்மது தலைமையில் எகிப்து வந்தனர்.

அவர்களுக்கு மன்னர் அல் முஹஜ்தீனுல்லா நிறைய அன்பளிப்புகளை வழங்கினார்.

மன்னருக்கு எல்லாவகையிலும் துணையாக அவரின் அடிமைத்தளபதி ஜவ்ஹர் அல் சக்கவி விளங்கினார்.மன்னர் மரணமடைந்த பிறகு அவரது மகன் அல்அஜீஜ் பில்லா நிசார் அபூமஸ்வூத் ஆட்சி பொறுப்பேற்றார்.

ராணுவம் ஜவ்ஹர் அல் சக்கவி அவர்களின் தலைமையிலும், நிர்வாகம் யாகூப் யூசுப் வசமும் இருந்தது.

மன்னர் சுகபோகங்களை அனுபவித்து அதிகாரத்திலிருந்து தூரமாக இருந்தார்.

அடுத்து பதிவியேற்ற மன்னரின் உத்திரவுகள் அவருக்கு மூளை குழம்பிவிட்டதோ என்று எண்ணும் படி அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!