Home செய்திகள்மாநில செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -2

கப்ளிசேட்

அப்பாஸிய பேரரசு -16

(கி.பி.750-1258)

செல்ஜுக்கிய‌ மன்னர் அல்ப் அர்ஸலான் அவர்களின் மருமகன் சுலைமான் அவர்களிடம் ரோமப்பகுதிகளும், சின்னாசிய பிரதேசங்களும் ஒப்படைக்கப்பட்டன.

செல்ஜுக்கியர்கள் ரோமப்பகுதியில் குடியேறினர். அவர்கள் ரோம செல்ஜுக்கியர்கள் என அழைக்கப்பட்டனர்.

செல்ஜுக்கிய சுல்தான் அல்அர்ஸலான் கொல்லப்பட்டார். அப்பாஸிய பேரரசர் காயீமும் மரணமடைந்தார்.

அல் அர்ஸலான் அவர்களின் மகன் மலிக்சா பதவி ஏற்றார்.

இவருக்கு அல் அர்ஸலான் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அமைச்சர் நிதாமுல் முல்க் அவர்களே வழிகாட்டியாகவும் அமைச்சராகவும் இருந்தார்.

செல்ஜுக்கிய சிற்றரசில், அமைச்சர் நிதாமுல் முல்க் அவர்களின் ஆலோசனையின்படி ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன

தலைநகரான பாக்தாத் நகரில் கல்லூரிகள், மருத்துவமனைகள் நூலகங்கள், பள்ளிவாசல்கள், மதரசாக்கள்,

வணிகர்கள் தங்கிச் செல்ல இடைஇடையே தங்கும் விடுதிகள், வானிலை நிலையம் ஆகியவைகள் அமைக்கப்பட்டன.

வானிலை நிலையத்தில் வானிலை அட்டவணைகள், காலண்டர்கள் வெளியிடப்பட்டன.

நீர்ப்பாசன வசதி ஏற்படுத்தப்பட்டது. மலிக்சா “சியாசாநாமா ” என்ற அரசியல் நூலை எழுதினார்.

பாக்தாத்தில் “நிஜாமியா பல்கலைக்கழகம்” உருவாக்கப்பட்டது. இமாம் கஜ்ஜாலி (ரஹ்)சஃதி போன்ற அறிஞர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

மன்னர் மாறுவேடம் பூண்டு மக்களின் குறைகளை கண்டறிந்து கலைந்தார்.

கல்வி,கணிதம் போன்றவைகளில சிறந்து விளங்கிய இக்காலத்தில் கவிஞர் உமர்கய்யாம் ஜலாலி ஆகியோர் இருந்தனர்.

வணிகம், கைத்தொழில்கள் செழித்தது. முறையற்ற வரிகள் நீக்கப்பட்டன. இது “செல்ஜூக்கியர் களின் பொற்காலம் “என அழைக்கப்படுகிறது.

மலிக்சா மரணமடைந்தார். அமைச்சர் நிதாமுல் முல்க் அவர்களின் நண்பரே பொறாமை காரணமாக ஹசீசியா என்ற இயக்கத்தை ஆரம்பித்து,

அமைச்சர் நிதாமுல் முல்க்கை ஹசீசியா இயக்கத்தினரே கொலை செய்தனர்.

அப்பாஸிய பேரரசின் மன்னராக 19 வயதே நிரம்பிய முஹ்ததிர் பதவி ஏற்றார்.இவர் சிறு வயதே ஆனாலும் மிகச்சிறந்த ஆட்சியாளராக இருந்தார்.

இவர் அப்பாஸிய பேரரசிலும், பாக்தாத் நகரத்திலும் கேளிக்கைகளை தடை செய்தார்.

சூதாட்டங்களையும் தடைசெய்து சூதாட்டக்காரர்களை வெளியேற்றினார்.

அந்தாக்கியா,புகாரா குவாரிஜிமி , சாமர்கந்து,கஸ்கர் போன்ற பிரதேசங்களை வென்றார். இதனால் அப்பாஸிய பேரரசு எழுச்சி பெற்றது.

செல்ஜூக்கிய மன்னர் மலிக்சா , அமைச்சர் நிதாமுல்முல்க் ஆகியோரது மரணங்கள், பின் வந்த செல்ஜூக்கிய மன்னர்களின் திறமையின்மை, அப்பாஸிய பேரரசரின் எழுச்சி, துருக்கியர்களின் புரட்சி,சிலுவைப் படைஎடுப்புகள், ஆகியவைகளால் செல்ஜூக்கியர் களின் அரசு வீழ்ச்சி அடைந்தது.

பாத்திமியாக்கள் உயிர் பெற்றனர். மீண்டும் சியாக்களின் கொள்கை உயிர்பெற்றது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com