Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -2

கப்ளிசேட்

அப்பாஸிய பேரரசு-10

(கி.பி.750-1258)

முஃதஸிலா கொள்கை என்பது நவீனத்துவம் என்ற பெயரிலும், பகுத்தறிவு சிந்தனை என்ற பெயரிலும், குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் மனம் போன போக்கில் விளக்கங்கள் அளித்து மக்களை திசை திருப்பும் கொள்கையாகும்.

இந்த கூட்டம் மக்களை தவறாக வழிநடத்தியது. குர்ஆன்,ஹதீஸிற்கு குதர்க்கமான விளக்கங்களை மனம்போன போக்கில் அளித்தனர்.

பகுத்தறிவு என்ற பெயரில் குர்ஆன், ஹதீஸின் பல கருத்துக்களை அறிவிற்கு பொருந்தாது என்று புறக்கணித்தனர்.

இதனால் ஆன்மீகத்தில் வறட்சியான நிலைகள் தோன்றியது.

இதனால் ஏராளமான ஹதீஸ்களை புறக்கணித்தனர். அல்லது மாற்று விளக்கமளித்தனர்.

இதனால் சியா சிந்தனைகளும், முஃதஸிலா சிந்தனைகளும், அப்பாஸிய பேரரசில் பெருமளவில் ஊடுறுவின.

ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் முஃதஸிலா கொள்கைகளை பெருமளவில் ஆதரித்தனர்.

ஆனால் முஃதஸிலா சிந்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை.

முஃதஸிலா கொள்கையை எதிர்த்த அஹ்மது இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

எதிர் கருத்துக்களை கூறும் உலமாக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆகவே பலர் வெளிப்படுத்தாமல் அமைதி காத்தனர்.

இதுபோன்று இஸ்லாமிய மதக் கொள்கைகளில் குழப்பங்களும், எதிர் சிந்தனைகளும் வலுப்பெற்றன.

முஃதஸிலா சிந்தனைகளை எதிர்த்த அறிஞர்களும், சிந்தனையாளர் களும், சிறையில் அடைக்கப்பட்டனர்.

அரசவை முழுவதும் முஃதஸிலா சிந்தனையாளர்கள் நிறைந்து இருந்தனர்.

பேரரசை பொறுத்தவரை எல்லா மதத்தவர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட்டன.

எல்லா மத அறிஞர்களும் மதிக்கப்பட்டனர்.

கல்வியில் மிகச்சிறந்த காலமாக பேரரசர் மஃமூனின் காலம் இருந்தது.

மஃமூன் மரணமடைந்தார். அவருக்கு பிறகு அவரின் சகோதரர் அபூ இஸ்ஹாக் முஹம்மது அல் முஹஸ்தஸிம் பில்லா ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

வழக்கமான ஆட்சி முறைகளில் குறிப்பிடத்தக்க பெரிய நிகழ்வுகள் ஏதும் இல்லாமல் கழிந்தது.

இவரது ஆட்சியிலும் முஃதஸிலா கொள்கையே முதன்மையாக இருந்தது.

இவருக்கு பிறகு அப்பாஸிய பேரரசின் அரசராக அல் வதீஹ் பில்லா பதவியேற்று ஐந்து ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.

இவரது ஆட்சியிலும் முஃதஸிலா சிந்தனைகளே மிகைத்து இருந்தது.

அப்பாஸிய பேரரசை அப்பாஸிய வம்ச அரசர்கள் 100 ஆண்டுகள் வலுவாக ஆட்சிபுரிந்தனர். ஒன்பது பேரரசர்கள் ஆட்சி செய்தனர்.

அதற்கு பிறகு அப்பாஸிய பேரரசு வலுவிழந்தது. பாக்தாத்தில் அரசராக அப்பாஸிய பேரரசர் இருந்தாலும், பல சிற்றரசுகள் தோன்றின.

சிற்றரசுகளின் சுவராஸ்யமான வரலாறுகளை ஆராய்வோம்.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!