Home செய்திகள்மாநில செய்திகள் கடின உழைப்பால், 23 வயதிலேயே நீதிபதியாகத் தேர்ச்சி பெற்றுள்ள திருமதி. ஶ்ரீபதி அவர்களுக்கு, பாரதிய ஜனதா கட்சி சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!- அண்ணாமலை..

கடின உழைப்பால், 23 வயதிலேயே நீதிபதியாகத் தேர்ச்சி பெற்றுள்ள திருமதி. ஶ்ரீபதி அவர்களுக்கு, பாரதிய ஜனதா கட்சி சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!- அண்ணாமலை..

by Askar

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி. ஶ்ரீபதி அவர்கள், தமிழகத்தின் முதல் பழங்குடியின நீதிபதியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நமது நாட்டின் குடியரசுத் தலைவர் பதவியை, பழங்குடியினத்தைச் சேர்ந்த திருமதி திரௌபதி முர்மு அவர்கள் அலங்கரிக்கும் இதே காலகட்டத்தில், தனது கடின உழைப்பால், 23 வயதிலேயே நீதிபதியாகத் தேர்ச்சி பெற்றுள்ள திருமதி ஶ்ரீபதி அவர்களுக்கு, பாரதிய ஜனதா கட்சி சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுதந்திரம் கிடைத்து எழுபத்தைந்து ஆண்டுகள் கடந்தும், அடிப்படை வசதிகள் இல்லாமல், அவசர மருத்துவச் சிகிச்சைக்குச் செல்லக் கூட சாலைகள் இல்லாமல், டோலி கட்டித் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டிய நிலையில், தமிழகத்தில் உள்ள பல மலைக்கிராமங்களை வைத்துக் கொண்டு,  போலி சமூக நீதி பேசிக் கொண்டிருக்கும் தமிழக ஆட்சியாளர்கள், இனியாவது பழங்குடி சமூக மக்களுக்கான வசதிகளையும் வாய்ப்புக்களையும் உருவாக்கிக் கொடுக்க முன்வர வேண்டும்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com