Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -1

கப்ளிசேட்

உமைய்யாக்களின் பேரரசு -30

(கி.பி 661-750)

உமைய்யாக்களின் பேரரசர் வலீத் இப்னு அப்துல் மலீக் அவர்கள் சிந்து பகுதியின் படைஎடுப்பிற்கு முகம்மது பின் காசிம் அவர்களை நியமித்தபோது,

அதனை கலீபாவின் சகோதரர் சுலைமான் இப்னு அப்துல் மலீக் அவர்கள் ஒப்புக்
கொள்ளவில்லை.

தானே தலைமையேற்று சிந்துப்பகுதிக்கு படைநடத்தவேண்டும்
என்று விரும்பினார்.

ஆனால் முகம்மது பின் காசிம் அவர்கள் ஏற்கனவே மத்திய ஆசியப்பகுதிகளின்
படையெடுப்புகளில்
கலந்து கொண்டதால் இந்த பகுதியைப் பற்றி நல்ல புரிதலும் இருந்தது.

17 வயதே நிரம்பிய முகம்மது பின் காசிம் போரின் அனைத்து நுணுக்கங்களையும்
அறிந்தவராகவும்,
எல்லாக்
போர்க்கலைகளிலும்
சிறந்த வீரராகவும் திகழ்ந்தார்.

அரசரின் நம்பிக்கைக்குரிய
ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் அவர்களின் உறவினர் என்ற கூடுதல் தகுதியும் இருந்ததால் சிந்து படையெடுப்பின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

தலைநகர் டமாஸ்கஸில் பேரரசர் வலீத் பின் அப்துல் மலீக் அவர்கள் மரணமடைந்தார்கள்.

பேரரசராக அவரின் சகோதரர் சுலைமான் பின் அப்துல் மலீக் அவர்கள் பதவி ஏற்றார்.

சிந்துப்பகுதியின் வெற்றியும் போர்பொருட்களும்,
முகம்மது பின் காசிமின் மூன்றரை ஆண்டு கால ஆட்சியால் கிடைத்த புகழும் பேரரசர் சுலைமானுக்கு பொறாமையை ஏற்படுத்தியது.

இதனால் டமாஸ்கசிற்கு முகம்மது பின் காசிமை திரும்ப அழைத்தார் பேரரசர் சுலைமான்.

இந்திய இளவரசிகளின் குற்றச்சாட்டை காரணமாக வைத்து
பசுவின் தோலில் சுற்றி இறுக்கி முகம்மது பின் காசிமை கொன்றதாக குற்றம் சாட்டப்படுகிறது.
வரலாறு எப்போதும் பல விநோதங்
களுடனேயே
கடக்கிறது.
அரசாட்சியில் சில செயல்கள் நியாயப்
படுத்தப்படுகிறது.

முகம்மது பின் காசிம் சிந்து மக்களின் அன்பால் இதனை தனிநாடாகவே அறிவித்து ஆட்சி செலுத்தி
இருக்கலாம்.

இஸ்லாமிய நெறியின்படி, தலைமைக்கு கட்டுப்பட்டு தலைநகர் திரும்பி தனது உயிரையும் தியாகம் செய்தார்.

பேரரசர் சுலைமான் அவர்கள் பொதுவாக மிக நீதியான அரசராகவே ஆட்சி நடத்தினார்.மிகவும் மென்மையான
வராகவே இருந்தார்.

மிக அதிக அளவில் கொடை கொடுப்பவராக இருந்தார்.இவர் சாப்பாட்டு பிரியராக இருந்தார்.ஒரே நேரத்தில் 40 முழுக்கோழிகளை ரசித்து உண்பார்.
அவர்காலத்தில் மக்கள் என்ன சாப்பிட்டாய்? என்று பேசிக்கொள்ளும் அளவிற்கு உணவுப் பிரியர்களாக இருந்தார்கள்.

இவரின் இரண்டு வருட ஆட்சியில் முகம்மது பின் காசிம் கொல்லப்பட்டதை தவிர வேறு அசம்பாவிதங்கள்
ஏதும் நடைபெறவில்லை.

பேரரசர் வலீத் இப்னு அப்துல் மலீக் மரணமடைந்து அடுத்த பேரரசராக சுலைமான் இப்னு அப்துல் மலீக் பதவி ஏற்றபோது நடந்த
வலீத் இப்னு அப்துல் மலீகின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில், நினைவுகூறப்பட்ட
செய்திகள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது.

வலீத் இப்னு அப்துல் மலீக் அவர்களின் ஆட்சியில் ஐரோப்பாவின் ஸ்பெயின்,
இந்தியாவின் சிந்து மற்றும் வடமேற்கு பகுதிகள் மற்றும் தளபதி குதைபா அவர்களின் தலைமையில் சென்ற படை மத்திய ஆசியாவில் புகாரா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான் பகுதிகளை கைப்பற்றி சீனா எல்லை வரை சென்றது.சீன அரசர் கீழ்படிந்து ஈட்டுத் தொகை கட்ட சம்மதித்ததால் சீனாவிற்குள் முஸ்லீம்களின் படை செல்லவில்லை.

இவ்வளவு பிரமாண்டமான சாம்ராஜ்யத்தின் பேரரசரான வலீத் இப்னு அப்துல் மலீக் அவர்கள் மூன்று நாட்களுக்கு ஒரு முழுக்குர்ஆனையும்,
ரமலான் மாதத்தில் 17 முறை முழு குர்ஆனையும் ஓதி முடிப்பார்கள்.
திருமறையை மனனமிட்டு ஓதுகின்ற காரிகளுக்கு நிறைய பொருட்களை கொடுத்தார்கள்.

முதன்முதலில் உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற மருத்துவ
மனையையும்,
குஷ்ட நோயாளிக்கு தனிப்பிரிவையும்
கட்டினார்கள்.

மஸ்ஜித் நபவி பள்ளிவாசலை பிரமாண்டமாக கட்டி அழகுபடுத்தினார்கள்
டமாஸ்கசில் உலகமே வியக்கிற அளவு பனுஉமையா பள்ளிவாசலைக் கட்டினார்கள்.
மக்காவிற்கு செல்ல சிறந்த சாலை வசதிகளை ஏற்படுத்தினார்கள்.

வலீத் இப்னு அப்துல் மலீக் அவர்களின் பத்து வருட ஆட்சி
(ஹிஜ்ரி 86-96) உமைய்யாக்களின் பொற்கால ஆட்சியாக இருந்தது.

அந்த பிரமாண்டமான பனு உமைய்யா பள்ளிவாசலில்தான்
தலைமை இமாம் அவர்கள் தனது கணீரென்ற குரலில் அவர்களின் சாதனைகளை நினைவுகூர்ந்தார்.

பேரரசர் சுலைமான் அவர்கள் தனக்கு பிறகான அரசாட்சியின் வாரிசை அறிவித்தபோது உமைய்யா அரசாங்கமே அதிர்ந்து போனது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்…!

பகுதி-1

கப்ளிசேட்

உமைய்யாக்களின் பேரரசு -31

(கி.பி 661-750)

பேரரசர் சுலைமான் அவர்கள் தனக்கு 13 ஆண்மக்கள் இருந்தாலும் தனக்கு அடுத்த உமைய்யா பரம்பரையின் சிறந்த ஆட்சியாளராக தனது சிறிய தந்தை அப்துல் அஜீஸ் அவர்களின் மகன் உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்)
அவர்களை அடுத்த பேரரசராக சாசனம் எழுதி வைத்து இருந்தார்கள்.

சுலைமான் அவர்கள் மரணித்த பிறகு பனு உமைய்யா பள்ளிவாசலில் கூடிய மக்கள் திரளில் உமர்இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் பேரரசராக முதன்மை அமைச்சரால் அறிவிக்கப்பட்டார்.

உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அல்லாஹ்விற்கு நன்றி சொல்லி அந்த பொறுப்பை ஏற்றுக்
கொண்டார்கள்.

அவர்களின் ஆட்சித்திறனையும்,
நீதியின் மாட்சியையும் கண்டு பிற்கால வரலாறு அவர்களை குலபாயே ராஷீதீன்கள் என்ற நான்கு கலீபாக்களுக்கு அடுத்து ஐந்தாவது கலீபா என்றும்,
இரண்டாவது உமர் என்றும் கொண்டாடுகிறது.

பேரரசராக அறிவிக்கப்பட்ட உமர்இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்)அவர்களை அரண்மனைக்கு அழைத்துச் செல்ல சாரட்வண்டி வந்தது.

அதனை மறுத்து தனது எளிய வீட்டிலேயே இருந்து அரசாட்சி செய்தார்கள்.தனது சொந்த வாகனமே போதுமானது என்றார்கள்.

அரசாங்கத்து
இடமிருந்து
உதவிகளையும்
மானியங்களை பெற மறுத்தார்கள்.

உமைய்யா அரசகுடும்பத்தினர் அதுவரை பெற்றுவந்த அரசு உதவித் தொகைகளை,
மானியங்களை, நிறுத்தினார்கள்.

அரசகுடும்பத்தினர் பயன்படுத்திய அரசாங்க நிலங்களை, சொத்துக்களை, அரசுடமை ஆக்கினார்கள்.

ஹதீஸ்களை தொகுக்கும் பணியை துவக்கி வைத்தார்கள்.
அதையொட்டி குர்ஆன் விரிவுரை,
மற்றும் விளக்கவுரை செய்யும் பணியும் தொடங்கியது.

ஜும்மா பிரசங்கத்தில்
நான்கு கலீபாக்கள் பெயரையும் ஓதவைத்து இறுதியில் குத்பாவை முடிக்கும் போது திருமறை வசனங்களோடு முடிக்குமாறு செயல்
படுத்தினார்கள்.

நிறைய பள்ளிவாசல்களை கட்டினார்கள்.
திருமறை மனனம் செய்யும் ஹிப்ழு கூடங்களை உருவாக்கினார்கள்.

அவருடைய மேசையில் அரசாங்கப் பணியின் போது அரசாங்க விளக்கையும்,தனது சொந்தப் பணியின்போது சொந்த விளக்கையும் பயன்படுத்தும் விதத்தில் இரண்டு விளக்குகள் இருந்தன.

அவர்களுடைய குழந்தைகள் கிழிந்த ஆடைகளை உடுத்துகின்றன,
என புதிய ஆடைவாங்க மனைவி வலியுறுத்த,
தனது சம்பளம் போக அதிக தொகையை அதாவது அடுத்தமாத சம்பளத்தை முன்பணமாக கருவூல அதிகாரியிடம் கேட்க,
அடுத்த மாதம் வரை உயிரோடு இருப்பீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் என அவர் கேட்க இந்த ஆட்சியின் நீதி எவ்வளவு சிறப்பானது.

1.36 லட்சம் கி.மீ நீளமுடைய ஆட்சியாளரின் எளிமை நம்மை வியக்க வைக்கிறது.

அந்த நூற்றாண்டின் மார்க்கத்தின் புத்துயிர் அளித்தவராக கருதப்பட்டார்கள்.

உமர்இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களின் ஆட்சியில் ஓநாயும் ஆடும் அருகருகில் தண்ணீர் அருந்தும் அளவு நீதி வலுவாக இருந்தது.

ஒரு நாள் தண்ணீர் அருந்திய ஆட்டை ஓநாய் அடித்துக்கொல்ல
இதனை கண்ட ஆடுமேய்க்கும் இடையன், உமர்இப்னு அப்துல் அஜீஸ்(ரஹ்)
மரணித்துவிட்டார்கள்
என்று கூறியதுபோல
பேரரசர் (கலீபா)மரணித்து இருந்தார்கள்.

அவர்கள் மரணித்தபோது அவர்களிடம் 21 தீனார்கள் மட்டுமே இருந்தது.
அவர்களின் இறுதி செலவுகள் போக மீதமிருந்த 11 தீனார்கள் அவர்களின் 11 குழந்தைகளுக்கு ஆளுக்கு ஒன்றாக கிடைத்தது.

அவர்களின் இரண்டரை வருட ஆன்மீக
அரசாட்சி நிறைவாக இருந்தது. அதன் பலன்களாக பிறகு நடந்தது என்ன?

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!