Home செய்திகள்மாநில செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -1

கப்ளிசேட்

உமைய்யாக்களின் பேரரசு -28

(கி.பி 661-750)

வலீத் இப்னு அப்துல் மலீக் அவர்களின் ஆட்சியில் மிகுந்த செல்வாக்குடன் இருந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் அவர்கள் ஈராக்கின் கவர்னராக இருந்தார்.
தனது செல்வாக்கால் உமையாக்களின் கிழக்கு எல்லை முழுமையிலும்
(ஆப்கானிஸ்தான் ,
இந்தியா, இலங்கை) தனதுஅதிகாரத்தை
செலுத்தினார்.

இலங்கையிலிருந்து
ஹஜ் செய்வதற்காக
பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என
ஒரு குழுவும்,

ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் அவர்களுக்கு
இலங்கை மன்னர் இடமிருந்து ஏராளமான பரிசு பொருட்களுமாக எட்டுக்கப்பல்கள் அரபிக்கடலில் மிதந்து சென்றன.

சிந்துப்பகுதியின் “டெபாலின்” என்ற பகுதியை கப்பல் கடந்தபோது திடீரென கடற்
கொள்ளையர்கள்
கப்பலை வழிமறித்து கொள்ளை அடித்தனர்.

பலரை கொன்று பலரை கைதிகளாகவும் சிறை பிடித்தனர்.

சிந்துப்பகுதியின்
மன்னராக தாஹிர் சிங் என்ற பிராமண மன்னர் ஆட்சியிலிருந்தார்.

இவருடைய ஆட்சியில் மதகுருமார்கள்
கோயில்களை வைத்து மக்களை சுரண்டி சுகபோகத்தில் வாழ்ந்தனர்.
மன்னரிடம் செல்வாக்குடன் இவர்கள் இருந்தார்கள்.

மக்கள் வறுமையிலும்
அதிக வரிகள்
மற்றும் அதிகாரிகள்,
அமைச்சர்களின் கெடுபிடிகள் என மிகுந்த துன்பத்துடன்
வாழ்ந்தனர்.

கடற்
கொள்ளையர்கள்
கொள்ளைகளில் மன்னனுக்கும் பங்களித்தனர்‌.
ஆகவே மன்னர் தாஹிர் அவர்களை
கட்டுப்படுத்தவில்லை

இலங்கை மன்னரின்
பரிசுக்கப்பல் கொள்ளையும், அதன் பயணிகள் சிறைபிடிக்கப்பட்ட
செய்தியும் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் அவர்களுக்கு எட்டியது.

உடனடியாக சிந்து மன்னன் தாஹிருக்கு கடற்
கொள்ளையர்களை
சிறைபிடிக்கவும்,
கைதிகளை விடுதலை செய்து பரிசுப்
பொருட்களோடு
அனுப்பி வைக்கவும், கோரிக்கை வைத்து ஒரு தூதரை அனுப்பினார்.

சிந்து மன்னர் தாஹிர்
தன்னிடம் படைபலம் இல்லை.ஆகவே தன்னால் கொள்ளையர்களை
பிடிக்க முடியாது என்று பதில் அனுப்பி வைத்தார்.

இதனால் கோபமுற்ற
ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் தனது மருமகனான 17 வயதே நிரம்பிய மிகச்சிறந்த வீரரான
முகம்மது பின் காசிம் தலைமையில் 6000 வீரர்களை பாக்தாத்தில் இருந்து
சிந்து மன்னனை தோற்கடிக்க அனுப்பி வைத்தார்.

முகம்மது பின் காசிம் அவர்களின் தலைமையில்
வந்தபடை கட்டுக்கோப்பாக சிந்து பகுதியை அடைந்து ஒவ்வொரு நகரமாக கைப்பற்றிக்
கொண்டே வந்தது.

இறுதியில் சிந்து மன்னர் தாஹிரின் தலைநகர்
“ஆலோர் நகரை” அடைய சிந்துநதியை
கடக்க திட்டமிட்டார்‌ முகம்மது பின் காசிம்.

சிந்து நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
சிந்து நதியை கடக்க தீவிர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் உள்ளூர் மக்களுக்கும்,
சிந்து நதிக்கரையில் இருந்த படகோட்டிகளுக்கும்,
அழைப்பு விடுக்கப்பட்டது.

ஏற்கனவே அருகிலுள்ள நகரங்களை கைப்பற்றியபோது
முஸ்லீம் வீரர்கள் நடந்து கொண்ட முறைகள் மக்களை வெகுவாக கவர்ந்தன.

தாஹிரின் அட்டகாசங்களால் வெறுப்புற்று இருந்த மக்களும்,
மேலும் கடற்
கொள்ளையர்களால்
பாதிக்கப்பட்டிருந்த
படகோட்டிகளும்,
கடலோடிகளும்
மன்னர் தாஹிரை தோற்கடிக்க வேண்டும் என்று இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆவலுடன் கலந்து கொண்டனர்.

அப்போது கடலோடிகளும்,
படகோட்டிகளும், சொன்ன ஒரு திட்டம் முகம்மது பின் காசிம் அவர்களை வெகுவாக கவர்ந்தது.

இஸ்லாமிய சிம்மாசனங்கள்…!

பகுதி -1

கப்ளிசேட்

உமைய்யாக்களின் பேரரசு -29

(கி.பி.661-750)

சிந்து நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
ஆகவே அதனை தாமதமில்லாமல் கடக்கவும், தங்கள் மன்னனை தோற்கடிக்கவும்,
சிந்துபகுதி மக்கள்
அருமையான ஆலோசனையை கூறினார்கள்.

தங்களின் படகுகள்,நாவாய்கள்,
சிறுகப்பல்கள் ஆகியவற்றை சிந்துநதியின் குறுக்காக நிறுத்தி அதனை முடிந்தளவு இணைத்து பிணைந்து ஒரு தற்காலிக பாலத்தை ஏற்பாடு செய்து தருவதாகவும் அதற்கு பகரமாக தங்களின் கோரிக்கைகளை பிறகு தெரிவிப்பதாகவும் கூறினார்கள்.

இணைப்புப் பாலம்
கட்டப்பட்டு தயாரானதும் முகம்மது பின் காசிமின் படை வீரர்கள் சிந்து நதியைக்கடந்து தாஹிரின் கோட்டைக்கு சிறிது தூரத்தில் முகாமிட்டனர்.

தனது ஒற்றர்கள் மூலம் முகம்மது பின் காசிமின் படைநிலைகளை அறிந்த தாஹிர் குறைந்த எண்ணிக்கை உள்ள படையை எளிதில்
தோற்கடித்து விடலாம் என்று திட்டமிட்டு, கோட்டைக்கு வெளியே தாஹிரின் படைகள் அணிவகுத்து வந்து திடீரென போரைத்துவக்கின.

முகம்மது பின் காசிமின் தலைமையில் நடந்த ஆலோசனைக்
கூட்டத்தில்
அதிகமான எண்ணிக்கை உள்ள எதிரியை சமாளிக்க ஒரு அருமையான யோசனையை ஒரு வயதான படைத்தலைவர் தெரிவித்தார்.

ஒரு சிறுபடை இழப்புகளை பொருட்படுத்தாமல்
தாஹிரின் படையின் பின்பகுதிக்கு சுற்றிச்சென்று பின் பகுதியிலிருந்து திடீரென ஊடுறுவி
மன்னன் தாஹிரை மட்டுமே குறிவைத்து நகர்ந்து அவனின் யானை மீது நாப்தா எரி அம்புகளை வீச வேண்டும்.

நாப்தா எறிஅம்புகள் நீண்டநேரம் நெருப்பை கக்குவதோடு திடீர் திடீரென வெடிக்கும்.

இதில் யானைகள் மிரண்டு தனது படைகளையே அடித்து துவம்சம் செய்யும்.

குழப்பம் ஏற்படும் போது மன்னன்
தாஹிரையும் அருகில் சென்று கொன்றுவிடலாம் என்ற ஆலோசனையை, அப்படியே செயல்படுத்த அப்துல்லா என்ற துணை தளபதி தலைமையில் படை அமைக்கப்பட்டு திட்டம் மிகச்சரியாக செயல் படுத்தப்பட்டது.

மிகத்தீவிரமாக போரிட்ட தாஹிரின் யானையை நோக்கி வீசப்பட்ட நாப்தா எறிஅம்புகளால், யானையின் அம்பாறாக்களில்
தீ பற்றி வெடித்ததால்,
அலறி அடித்து ஓடிய யானைமீது அமர்ந்து இருந்த மன்னர் தாஹிரின் மீது துணைத் தளபதி அப்துல்லா ஏவிய அம்பு மன்னர் தாஹிரின் தொண்டையை துளைக்க மரணமடைந்தார் தாஹிர்.

தாஹிரின் அலோர் கோட்டை கைப்பற்றப்பட்டது.

மன்னர் தாஹிரின் சகோதரி ராணிபாய் ஜௌஹர் அவர்களை மணப்பவரே அடுத்து அரியணை ஏறுவார்
என்றும் மிக நீண்ட ஆட்சியை நடத்துவார் என்றும் ஜோதிடர்கள் கூறியதால் தனது சகோதரியையே தாஹிர் மணந்தார்.
ஜோதிடர்களின் வாக்கு பொய்த்துப் போய் இடையிலேயே தாஹிர் போரில் கொல்லப்பட்டார்.

முஹம்மது பின் காசிம் மேலும் முன்னேறி மேற்கு பஞ்சாப், கன்னோஜ் நகரம் வரை வென்றார்.

இந்தப் போருக்காக ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் 60 மில்லியன் திர்ஹம்களை செலவிட்டார்.

போரில் வெற்றபெற்ற முஸ்லீம்களின் படைக்கு, ஏராளமான யானைகள்,
குதிரைகள், கால்நடைகள் என 120 மில்லியன் திர்ஹம்கள் மதிப்புள்ள பொருட்கள் போரின் வெற்றிப்
பொருட்களாக கிடைக்கப்பெற்றன.

முஸ்லீம்களின் ஆட்சியும்,நிர்வாகமும்
ஒழுக்கங்களும்,
கட்டுப்பாடுகளும்,
முகம்மது பின் காசிமின் தலைமையும் மக்களை பெரிதும் கவர்ந்தன.

சில அரசியல் காரணங்களால் முகம்மது பின் காசிம் கலீபாவால் மீண்டும் தலைநகருக்கு அழைக்கப்பட்டார்.

மக்கள் அவரை பிரிய மனமில்லாமல் அழுதனர்.
அவரின் உருவங்களை திரைச்சீலையில் வரைந்து வைத்துக்
கொண்டனர்.

மன்னர் தாஹிரின் மகள்களான சூர்யா தேவி,பர்மல் தேவி ஆகியோர் முகம்மது பின் காசிம் தங்களை கெடுத்துவிட்டதாக
பொய் செய்திகளை பரப்பினார்கள்.

பின்னர் இளவரசிகளும், தங்கள் தந்தையை கொன்றதால் தவறாக சொன்னதாக மனம் வருந்தினார்கள்.

இறுதியாக மக்களின் அன்புகளால் நனைந்து நாடு திரும்பிய முகம்மது பின் காசிமிற்கு கலீபா வழங்கிய பரிசு இன்றுவரை ஆச்சரியமாகவும்
அதிர்ச்சியாகவும்
வரலாற்றில் பேசப்படுகிறது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!