Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -1

கப்ளிசேட்

உமையாக்களின் பேரரசு -26

(கி.பி 661-750)

ஒருவாரம் தொடர்ந்து நடைபெற்ற போரில் பின்வாங்கி ஓடிய ரோட்ரிக்ஸ் மன்னன்
என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
அவரது குதிரையும்,
குதிரையின் சேணமும் ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்
பட்டதால் அவர் ஆற்றில் மூழ்கி இறந்திருக்கலாம்.

தாரிக் இப்னு ஸியாத்
முஸ்லீம்களின் வெற்றியால் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினார்.

தனது படைப்பிரிவை நான்காக பிரித்து நான்கு முக்கிய நகரங்களை கைப்பற்ற அனுப்பி வைத்தார்.

கார்டோவா, மலாக்கா
நகரங்களை உபதளபதிகள் எளிதாக கைப்பற்றினர்.
ஸ்பெயினின் அன்றைய தலைநகரான தொலதோவை தளபதி தாரிக் இப்னு ஸியாத் கைப்பற்றினார்.

ஏராளமான கனீமத் பொருட்கள் (போரில் கைப்பற்றப்படும் பொருட்கள்) கிடைத்தன.
இதில் சிறப்பாக சுலைமான் நபிக்கு சொந்தமான முத்து, மாணிக்கம், ரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஜின்களால் செய்யபபட்டதாக நம்பப்படும் விலைமதிப்பற்ற மேசை ஒன்று கிறிஸ்தவ ஆலயத்திலிருந்து
கைப்பற்றப்பட்டது.

தௌராத் வேதம் எழுதப்பட்ட 21 பிரதிகளும்,
ஸ்பானிய மன்னர்களின்25 கிரீடங்களும்,
தாவரங்கள், மிருகங்கள், கனிமங்கள் பற்றி எழுதப்பட்ட அற்புதமான குறிப்புகளும் கிடைத்தன.

இதனை உடனடியாக
அரசர் வலீத் இப்னு மலீக் அவர்களுக்கு
கவர்னர் மூஸா பின் நுஸைர் அவர்கள் தெரியப்படுத்தினார்.

இஸ்லாமிய படையின் கட்டுக்கோப்பையும்
ஒழுக்கத்தையும்
கேட்டு அதிசயத்த‌‌ ஸ்பெயினின் முன்னாள் இளவரசர்
அகிலா, தளபதி
தாரிக் இப்னு ஸியாத்தை சந்திக்க‌ விரும்பி வந்து சந்தித்தார்.

தளபதி தாரீக்கிடம் நீங்கள் தான் அமீரா? (தலைவரா) என அகிலா கேட்டார்.
உடனடியாக அதனை மறுத்து எனக்கு மேல்
மூஸா பின் நுஸைர் என்ற கவர்னரும் அவருக்கு மேல் எங்கள் தலைவர்
வலீத் இப்னு மலீக் அவர்களும் என பணிவோடு கூறியதை கேட்டு அசந்து போனார் அகிலா.

ஸ்பெயினின் பல நகரங்களை கைப்பற்றிக்
கொண்டே தளபதி தாரீக்கின் படை முன்னேற,

முஸ்லீம் படைகளுக்கு உதவ கவர்னர் மூஸா பின் நுஸைர் அவர்களும் ஒரு படையோடு ஸ்பெயினுக்கு வந்தார்கள்.

பேரரசர் (கலீபா) அவர்கள் முஸ்லீம் படைவீரர்களை கருத்தில் கொண்டு புதிய பகுதியான ஸ்பெயினின் உள்பகுதிக்குள் நுழைய வேண்டாம் என்ற கருத்தை கவர்னர் மூஸா பின் நுஸைர் அவர்கள் கட்டளையாக தளபதி தாரீக் அவர்களுக்கு தெரிவித்து இருந்தார்கள்.

இருப்பினும் மக்களின் ஆதரவால்,
தாரீக் இப்னு ஸியாத் அவர்கள் ஸ்பெயினின் உள்பகுதிக்குள் சென்று பல நகரங்களை கைப்பற்றினார்கள்.

கவர்னர் மூஸா அவர்களும் தளபதி தாரீக் அவர்களும் நேரடியாக சந்தித்தபோது,
கவர்னர் மூஸா பின் நுஸைர் அவர்கள் தளபதி தாரீக் அவர்களை கட்டளையை மீறியதற்காக பலர் முன்னிலையில் கண்டித்தார்கள்.

தளபதி தாரீக் அவர்கள் அதற்கான காரணங்களை கூறியதை ஏற்றுக்கொண்டு
ஒருவரை ஒருவர் தழுவிக்
கொண்டார்கள்.

கவர்னர் மூஸா அவர்கள் அருகிலிருந்த பிரான்ஸ் நாட்டிற்குள்
நுழைய திட்டமிட்டார்.
மூஸா அவர்கள் அப்போது 70 வயதை கடந்திருந்தார்.

இதற்கிடையில் மன்னர் வலீத் இப்னு மலீக் அவர்களிடமிருந்து டமாஸ்கஸ்ஸிற்கு வரும்படி அழைப்பு வந்தது.

மூஸா பின் நுஸைர் அவர்கள் தனது மூத்தமகன் அப்துல் அஜீஸை ஸ்பெயின் கவர்னராகவும்,

இரண்டாவது மகன் அப்துல் மலீக்கை
கைரவானின் கவர்னராகவும்,
மூன்றாவது மகன்
அப்துஸ் ஸாலிஹை சியூட்டாவின் தளபதியாகவும் நியமித்தார்.

ஏராளமான கனீமத்
பொருட்களோடு
தளபதி தாரிக் இப்னு ஸியாத் அவர்களையும் அழைத்துக்கொண்டு
தலைநகர் டமாஸ்கஸை நோக்கி
பயணித்தார்.

ஸ்பெயினின் கவர்னராக நியமிக்கப்பட்ட மூஸா பின் நுஸைர் அவர்களின் மகன் அப்துல் அஜீஸ் ஸ்பெயினில் கொலை செய்யப்பட்டார்??

அடுத்து நிகழ்ந்தது??

இஸ்லாமிய சிம்மாசனங்கள்…!

பகுதி -1

கப்ளிசேட்

உமையாக்களின் பேரரசு -27

(கி.பி.661-750)

ரோட்ரிக்ஸ் மன்னரின் விதவை மனைவியை கவர்னர் அப்துல் அஜீஸ் திருமணம் புரிந்துகொண்டு அந்தப்பெண்ணை
திருப்திபடுத்த செய்த சில செய்ல்களை பிடிக்காத ஒரு இராணுவ வீரர் அவரை கொலை செய்தார்.

முஸ்லீம்களின் ஆட்சியில் ஸ்பெயின்
பல்வேறு துறைகளில்
மாற்றங்களை கண்டு வளர்ச்சி பாதையில்
பயணிக்க துவங்கியது.

கிறிஸ்துவர்களும்,
யூதர்களும் தங்கள்
மத வழக்கங்களை முழுவதும் பின்பற்ற அனுமதிக்கப்பட்டனர்.

நீதிமன்ற வழக்குகளில் அவரவர் மதபழக்க
வழக்கங்கள்,
சட்டங்கள்படி, தீர்ப்புகள் வழங்கப்பட்டன.
எல்லா மத மக்களும் சம உரிமைகளோடு வாழ அனுமதிக்கப்பட்டனர்.
முழு மதசார்பற்ற அரசாக ஸ்பெயினின் முஸ்லீம்களின் ஆட்சி திகழ்ந்தது.

ஏராளமான வரிகள் நீக்கப்பட்டன.நிலவரி மட்டுமே வசூலிக்கப்பட்டது.
முஸ்லீம்களிடம் ஜகாத்தும்,இதர சமயத்தவரிடமிடம்
ஜிஸ்யாவும் வசூலிக்கப்பட்டன.

பெண்கள்,
வயோதிகர்கள்,
சிறுவர்கள்,
ஊனமுற்றவர்கள்,
மதங்களின் குருக்கள்,
புத்தி சரியில்லாத வர்கள்,
போன்றவர்களுக்கு
ஜிஸ்யா வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

மக்களின் பொருளாதார சக்திக்கு ஏற்ப வருடம்12- 48 திர்ஹங்களாக வசூலிக்கப்பட்டது.
அதையும் 12 தவணைகளாக பிரித்து
செலுத்தவும் அனுமதிக்கப்பட்டது.

இந்த எளிய சுரண்டல் இல்லாத வரிகளாலும்,
அதிகாரிகள் மற்றும் மத குருமார்களின் நெருக்கடிகள் இல்லாத நிலையாலும் ,மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.

நாட்டை விட்டு வெளியேறிய அரசகுலத்தவர்கள்,
பிரபுக்கள் , மதகுருக்கள் இவர்களின் நிலங்கள் அரசுடமை
ஆக்கப்பட்டன.
அடிமைகளுக்கு உணவுகள், உடைகள் ஆகியவைகள் சரியாக வழங்கவும் கட்டளையிடப்பட்டது.

மேலும் அடிமைகளை விடுதலை செய்வது சொர்க்கத்தை பெற்றுத்தரும் என்ற இஸ்லாமிய நெறியும் கூறப்பட்டது.
ஏராளமான அடிமைகள் இஸ்லாத்தை ஏற்றனர்.

பண்ணைகளில் பணி செய்த அடிமைகளுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன.

முஸ்லீம்கள் ஸ்பெயினை கைப்பற்றியவுடன்
அரபுகள் ஸ்பெனியில் கோத்திரங்களாக குடியேறினர்.

தாரிக் இப்னு ஸியாத் அவர்களும் அவர்களின் படையில் 90% பேரும் பெர்பரி இனத்தை சேர்ந்தவர்கள்.
அரபு முஸ்லீம்கள் பெற்றிருந்த உரிமைகளை இவர்களால் பெற முடியவில்லை.

மேலும் நிதிகளும்,
மானியங்களும்,
பகிர்ந்தளிக்கப்பட்ட
நிலங்களும், அரபுகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டு வழங்கப்பட்டது.

இதனால் இந்த இரு பிரிவினருக்கும் இடையே உரசல்கள் இருந்து கொண்டே இருந்தது.

கி.பி 716 முதல் 756 வரையிலான 40 வருடகாலங்களில்
ஸ்பெயினில் 20 கவர்னர்கள் நிர்வாகத்தில் இருந்துள்ளனர்.

இஸ்லாமிய பேரரசின் தலைநகர் தொலைதூரத்தில் இருந்ததாலும்,
தொலை தொடர்புகள் குறைவாக இருந்ததாலும், கவர்னர்கள் அவர்களின் விருப்பத்திற்கேற்ப செயல்பட்டனர்.

உமைய்யாக்களின் முஸ்லீம் ஆட்சியில் ஸ்பெயின்
தொலதோ,கிலஸியா,பார்சிலோனா,
அந்தலூஸ் என்று நான்கு மாகாணங்களாக பிரிக்கப்பட்டு இருந்தது.

ஸ்பெயினில் முஸ்லீம்களின் முதல் கவர்னரான அப்துல் அஜீஸ் அரபுகள்- பெர்பர்கள் இடையே
நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒரு சபையை அமைத்தார்.

முஸ்லீம்கள்,
கிறிஸ்துவர்கள்,
யூதர்கள் எல்லோரும் சம உரிமை பெற்றவர்களாக வாழ்ந்தனர்.

ஸ்பெயின் முஸ்லீம்களின் ஆட்சியில் அதிகபட்ச வளர்ச்சியில் திளைத்தது.

இலங்கையிலிருந்து
அரபுக் கடலில் ஈராக்கை நோக்கி
ஒரு கப்பல் பயணித்தபோது அந்தக்கொள்ளை
நடந்தது.
அதன் விளைவுகள்??

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!