அறுபடை ஆன்மீகப் பயணம் திட்டத்தின் மூலம் வருகை தந்த 207 பேரும் பழனியில் முருகன் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் என்பது மிகச் சிறப்பான புதிய திட்டம் என்பதால் பக்தர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருக்கின்றது.
அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றை ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் முதற்கட்ட பயணத்தில் 207 மூத்த குடிமக்கள் கடந்த 28 ம் தேதி புறப்பட்டனர். இந்த குழுவினர் முதல் கட்டமாக திருப்பரங்குன்றம் ,பழமுதிர்ச்சோலை சாமி தரிசனம் முடித்து இன்றுபழனிக்கு வருகை தந்தனர். மின் இழுவையில் வழியாக மலைக் கோவிலுக்கு சென்று பழனி தண்டாயுதபாணி சுவாமியை வழிபட்டனர்.பின்னர் திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றனர் கோயில் நிர்வாகம் சார்பில் 6 பேருந்துகளின் மூலமாக வருகை தந்த207 பேருக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டு அவர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கபட்டது.
பழநி- ரியாஸ்
You must be logged in to post a comment.