பகுதி -1
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -1
கப்ளிசேட்
உமையாக்களின் பேரரசு-13
(கி.பி 661-750)
முஆவியா (ரலி) அவர்கள் இருபது வருடங்கள் சிரியா என்ற பெரும் நிலப்பரப்பில் மிகச்சிறந்த ஆளுநராக பணியாற்றினார்.
குலபாயே ராஷிதீன்கள் என்ற நான்கு கலீபாக்களை அடுத்து வந்த முஆவியா (ரலி) அவர்கள் காலத்திலிருந்து அது குடும்ப ஆட்சியாக மாறியது.
ஜனநாயக ஆட்சிமுறை மன்னராட்சி முறையாக மாறியது.
ஆகவே தான் உமைய்யா பரம்பரையில் உமைய்யா ஆட்சி என்கிறபோது,
முஆவியா (ரலி) அவர்களை பேரரசர் என்று அழைப்பதே சரியாக இருக்கும்.
ஒருகோடியே பதினொரு இலட்சம் கி.மீ நீளமுள்ள எல்லைகளையும்,
மூன்று கோடியே இருபது இலட்சம் சதுர கி.மீ நிலப்பரப்பிலும் முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சி பரவி இருந்தது.
ஏமனில் இருந்து சீனா,
துர்க்மெனிஸ்தான், வரையிலும்,
மேலும் பாரசீக பேரரசு முழுவதிலும்
ரோமாபுரி பேரரசில்
மூன்றில் இரண்டு பங்கு என ,
அன்றைக்கு இருந்த ஆசியா, ஆப்பிரிக்கா,
ஐரோப்பா என்று மூன்று கண்டங்களிலும்
முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சி விரிவடைந்து இருந்தது.
இவர்களின் ஆட்சித்திறனால்,
மக்களின் ஒத்துழைப்பால், நாள்தோறும் பேரரசு விரிந்து கொண்டே போனது.
பத்து வருடம் பேரரசராக ஆட்சி செய்துவிட்ட முஆவியா(ரலி) அவர்கள்,
தனக்கு அடுத்து தனது வாரிசை அறிவிக்க நினைத்தார்.
முஆவியா (ரலி) தனது ஆட்சிக்குப் பிறகு ஆட்சியை ஹஸன் (ரலி) ஹுசைன் (ரலி) ஆகியோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முஆவியா (ரலி) அவர்கள், ஹஸன்(ரலி) அவர்களுக்கு எழுதி கொடுத்த ஒப்பந்தத்தையும் மறந்தார்.
நாட்டின் சூழல் அதுபோல இருந்தது.
இவர்களின் உமைய்யா வம்சத்து
உறவினர்கள் நிறைய பொறுப்புகளில் இருந்தார்கள்.
ஆகவே இவரது மகன் யஜீத் அடுத்த ஆட்சிக்கு வந்தால்தான், எல்லோரின்
ஒத்துழைப்போடும் சரியாக நிர்வாகம் செய்ய முடியும் என்று நினைத்தார்.
அதனை முஹீரா (ரலி) மற்றும் எகிப்தில் பொறுப்பிலிருந்த அம்ரு இப்னு ஆஸ்(ரலி) போன்ற மூத்த நபித்தோழர்களே, ஆலோசனை சொல்லி சாசனம் எழுத வலியுறுத்தினார்கள்.
உமைய்யா பேரரசின் அடுத்த அரசர் யஜீது என்று இவர் எழுதிய சாசனத்தை எல்லா மாகாண ஆளுநர்களும், தலைவர்களும், ஏற்றுக்கொண்டு அதுவே சரியென்றும் சொன்னார்கள்.
சிறந்த கொடையாளராக விளங்கிய முஆவியா (ரலி )அவர்கள், ஹஸன் (ரலி)அவர்களுக்கு மூன்று லட்சம் தீனாரும், அப்துல்லா இப்னு ஜூபைர் அவர்களுக்கு ஒரு இலட்சம் தீனாரும், மானியமாக கொடுத்தார்கள்.
நிறைய நபித்தோழர்களுக்கு
தாராளமாக கொடை கொடுத்ததால் யாருமே அவர்களை எதிர்க்கவில்லை.
இவர்களின் நிர்வாகத்திறனும்,
ஆட்சியின் சிறப்பும், எல்லோரையும் வசீகரித்தது.
உலகில் மிகப்பெரிய இஸ்லாமிய பேரரசை
ஏற்படுத்திய முஆவியா (ரலி) அவர்களின் இறுதிக்காலமும்
நெருங்கியது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
You must be logged in to post a comment.