கீழக்கரையில் இஸ்லாமிய பள்ளி குழும வளாகத்தில் சுகாதார விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி..

கீழக்கரை இஸ்லாமியா துவக்கப் பள்ளி, இஸ்லாமியா மேல்நிலைப்பள்ளி மற்றும் இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து மாணவர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் மத்தியில் சுகாதார இந்தியா திட்டம் ( SWATCH BHARATH MISSION) விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு இன்று (04-06-2017) நடைபெற்றது.

இந்நிகழ்வில் சுகாதாரம் பற்றியும், கீழக்கரையை திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத நகரமாக எவ்வாறு உருவாக்குவது போன்ற விழிப்புணர்வு சம்பந்பந்தமான அறிவுரைகள் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைவருக்கும் நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை இஸ்லாமியா பள்ளியின் தாளாளர் M.M.K இபுராஹிம் நில வேம்பு கசாயம் அருந்தி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பள்ளியைச் சார்ந்த பள்ளி மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள், பள்ளி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.