Home செய்திகள் பந்து வீச்சாளர்களால் வெற்றியைப் பெற்ற லக்னோ; 21 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் தோல்வி..

பந்து வீச்சாளர்களால் வெற்றியைப் பெற்ற லக்னோ; 21 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் தோல்வி..

by Askar

ஐபிஎல் 2024 தொடரின் 11வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே லக்னோ ஏகானா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த சீசனில் லக்னோ அணிக்கு முதல் உள்ளூர் போட்டியாக இது அமைந்தது.

இந்த போட்டியில் லக்னோ அணிக்கு நிக்கோலஸ் பூரான் கேப்டனாக செயல்பட்டார். அதேபோல் கேஎல் ராகுல் இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்டார். சமீபத்தில் தான் காயத்தில் இருந்து குணமடைந்து கேஎல் ராகுல் வந்திருப்பதால், அவரது பணியை எளிதாக்க இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பாத நிக்கோலஸ் பூரான் தெரிவித்தார். லக்னோ அணியில் யஷ் தாக்கூருக்கு பதிலாக சித்தார்த் சேர்க்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் இல்லாமல் விளையாடுகிறது.

டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் நிக்கோலஸ் பூரான் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குவன்டைன் டி காக் 54, க்ருணால் பாண்ட்யா 43, நிக்கோலஸ் பூரான் 42, லியாம் லிவிங்ஸ்டன் 27 ரன்கள் எடுத்தனர்.

பஞ்சாப் பவுலர்களில் சாம் கரன் 3, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ககிசோ ரபாடா, ராகுல் சஹார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

பேட்ஸ்மேன்களுக்கு சவால் விடுக்கும் ஆடுகளமாக இருந்து வரும் லக்னோ மைதனாத்தில் சேஸிங்கில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி, இந்த சீசனில் முதல் வெற்றியை பெற்றது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com