Home செய்திகள் மறுபடியும் மறுபடியும் தோற்கும் சிஎஸ்கே! அசத்திய லக்னோ..

மறுபடியும் மறுபடியும் தோற்கும் சிஎஸ்கே! அசத்திய லக்னோ..

by Askar

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 39வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது.

ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ருதுராஜ் மற்றும் ஷிபம் துபே ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிரடியாக ஆடிய துபே 27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் 60 பந்துகளில் 108 ரன்கள் விளாசி கடைசி வரை அவுட்டாகமால் இருந்தார். 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உதவியுடன் இந்த ரன்களை அவர் எடுத்தார். கடைசி ஓவரின் கடைசி பந்தை சந்தித்த தோனி பவுண்டரி அடித்து அசத்தினார். இதன் மூலம் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. லக்னோ அணியின் மேட் ஹென்றி, யாஷ் தாக்கூர், மோக்சின் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கை தொடர்ந்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி 19.3 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது. இதன் மூலம் இரண்டாவது முறையாக சென்னையை வீழ்த்தி வெற்றி கண்டுள்ளது லக்னோ. இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டாய்னிஸ் 63 பந்துகளில் 124 ரன்கள் விளாசி ஆட்டத்தின் போக்கையே மாற்றி வெற்றிக்கு வித்திட்டார். ஸ்டாய்னிஸ் 13 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என சென்னை பந்துவீச்சை நாலாபுறமும் தெறிக்கவிட்டார். அதிகபட்சமாக பூரன் 15 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்தார்.

சென்னை அணியின் தீபர் சஹார், முஸ்தபிசுர் ரஹ்மான் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். பத்திரானா இரண்டு விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இந்த இரு அணிகளுக்கு இடையே லக்னோவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை தழுவி இருந்தது. எனவே இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பாதைக்கு திரும்ப சென்னை சூப்பர் கிங்ஸ் முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் தோல்வியை தழுவியுள்ளது.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் நான்கு முறை இதுவரை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சிஎஸ்கே ஒரு முறை, லக்னோ சூப்பர் ஜெயண்ட் 2 முறை, ஒரு போட்டி முடிவு இல்லை. லக்னோவுக்கு எதிராக சிஎஸ்கேவின் அதிகபட்ச ஸ்கோர் 217 ஆக உள்ளது. சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னோவின் அதிகபட்ச ஸ்கோர் 211 என இருக்கிறது.

TS 7 Lungies

You may also like

Leave a Comment

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!