Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தென்காசி மாவட்டத்தில் “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” திட்டத்தின் கீழ் தூய்மை பணி; மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு..

தென்காசி மாவட்டத்தில் “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” திட்டத்தின் கீழ் தூய்மை பணி; மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு..

by ஆசிரியர்

தென்காசி மாவட்டத்தில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தின் மூலம் பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைகளை அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊர்மேலழகியான் கிராம அரசு மேல் நிலைப்பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தின் மூலம் பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைகளை அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் 09.01.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற திட்டத்தின் மூலம் பள்ளி வளாகத்திலுள்ள குப்பைகளை அகற்றி மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பைகளை பிரித்து சுகாதாரப் பணியாளர்களிடம் வழங்கிடவும், கழிவறையை சுத்தம் செய்து தூய்மையாக வைத்திருக்கவும், நெகிழியை பயன்படுத்தாமல் மஞ்சப்பையை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊர்மேலழகியான் கிராம அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைகளை அகற்றும் பணிகளை பள்ளி மேல்நிலைக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி சுகாதாரப் பணியாளர்கள், மாணவர்கள் ஆகியோர் இணைந்து சுத்தம் செய்து வருகிறார்கள்.

எனவே, இதன் மூலம் பொதுமக்களும் தங்கள் பகுதியினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பைகளை பிரித்து தங்கள் பகுதியில் வரும் சுகாதாரப் பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். நெகிழியைத் தவிர்த்து மஞ்சப்பையை உபயோகிக்க வேண்டும். அனைத்து பொதுமக்களும் சுகாதாரமாக வாழ வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின் போது முதன்மைக் கல்வி அலுவலர் முத்தையா, மாவட்ட கல்வி அலுவலர் தேவிகாராணி, ஊர்மேலழகியான் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முருகையா. உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன், பள்ளி மேல்நிலைக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி சுகாதாரப் பணியாளர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com