49
இராமநாதபுரம், ஜன.10- கர்நாடகம் மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 47 பேர், கண்டக்டர், டிரைவர் உள்பட 49 பேர் சபரிமலை, திருச்செந்தூர் சென்று விட்டு ஆந்திர பதிவெண் கொண்ட தனியார் பஸ்சில் ராமேஸ்வரத்திற்கு நேற்றிரவு வந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே புல்லந்தை சர்ச் பகுதியில் வந்தபோது சாலையின் இடது ஓரம் நின்ற திருச்செங்கோடு பதிவெண் கொண்ட லாரி மீது ஐயப்ப பக்தர்கள் வந்த பஸ் மோதியது. இதில் பெல்லாரி கண்ணப்பா மகன் சந்தீப் 25 படுகாயங்களுடன் சம்பவ இடத்தில் இறந்தார். இதில் படுகாயமடைந்த 14 பேர் கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக லாரி டிரைவர் உச்சிப்புளி அருகே சேர்வைகாரன் ஊரணியைச் சேர்ந்த முனியசாமியிடம் ஏர்வாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.