Home செய்திகள் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம்: ஆட்சியர் ஆய்வு..

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம்: ஆட்சியர் ஆய்வு..

by ஆசிரியர்

இராமநாதபுரம், நவ.21 – இராமநாதபுரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரியில் 2024-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கத்துரை முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரியில் 2024-ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலுக்குரிய வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைய உள்ளதை பார்வையிட்டார். ராமாநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருச்சுழி, அறந்தாங்கி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு என்னும் இயந்திரங்கள் உள்ளிட்ட மின்னனு வாக்குப்பதிவு கருவிகள் வைக்கப்படும் பாதுகாப்பு அறை மற்றும் வாக்குகள் என்னும் அறை ஆகியவற்றை பார்வையிட்டு அவற்றிற்கான பாதுகாப்பு தன்மைகள் குறித்து பார்வையிட்டார்.

வாக்கு எண்ணிக்கை நாளன்று முகவர்கள் வந்து செல்லும் பகுதி, வாக்கு எண்ணிக்கையின் போது அலுவலர்கள், பணியாளர்கள் வந்து செல்லும் பகுதி என தனித்தனியே அமைக்க உள்ள வழித்தடங்களை பார்வையிட்டார். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு தேவையான பாதுகாப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கத்துரை உடன் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் ஆலோசனை மேற்கொண்டார். பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, பொதுப்பணித்துறை கோட்டப்பொறியாளர் (கட்டடங்கள்) குருதிவேல்மாறன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com