Home செய்திகள் ராமநாதபுரம் மாவட்ட தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.313 கோடி மதிப்பில் தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்றம்..

ராமநாதபுரம் மாவட்ட தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.313 கோடி மதிப்பில் தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்றம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம், நவ.21 – இராமநாதபுரம் மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன் முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மாநாட்டை துவக்கி வைத்து தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்து வைத்தார். அவர் பேசுகையில், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டம் தோறும் தொழில் முதலீட்டாளர்களை ஒருங்கிணைத்து தொழில் நிறுவனங்களை உருவாக்கி பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்குடன் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இந்த மாநாடு துவங்கப்பட்டது. நமது மாவட்டத்திற்கு நிர்ணயித்த  ரூ.300 கோடி இலக்கை கடந்து  ரூ.313 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்றம் செய்து இலக்கு எட்டப்பட்டுள்ளது இதன்மூலம் 1,532 பேர் வேலைவாய்ப்பு பெற உள்ளனர் என்றார். மாவட்ட தொழில் மையம் மேலாளர் மாரிமுத்து, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், மண்டபம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், மாவட்ட தொழில் மையம் உதவி பொறியாளர் பிரதீப், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com