58
இராமநாதபுரம், செப்.14- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் ஆற்றாங்கரை மீனவர்களிடம் கடந்த 9ஆம் தேதி குறைகள் கேட்டறிந்தார். வைகை ஆறும் கடலும் இணையும் முகத்துவார பகுதியில் கிழக்கு பகுதியை ஆழப்படுத்தியது போல் மேற்கு பகுதியையும் ஆழப்படுத்தி கொடுத்தால் மீனவர்கள் படகு எளிதில் சென்று வர எளிதாக இருக்கும் என மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, உதவி இயக்குநர்(வடக்கு)கோபிநாத், காளீஸ்வரன், பொறியாளர்(வடக்கு) பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவர் முஹமது அலி ஜின்னா, துணைத் தலைவர் நூருல் அஃபான் உடனிருந்தனர்.
You must be logged in to post a comment.