Home செய்திகள் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணிப்பித்த பெண் பயனாளிகளின் பட்டியலைக்கொண்டு மதுரை ஆட்சியர் சங்கீதா வீடுவீடாக ஆய்வு…

உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணிப்பித்த பெண் பயனாளிகளின் பட்டியலைக்கொண்டு மதுரை ஆட்சியர் சங்கீதா வீடுவீடாக ஆய்வு…

by ஆசிரியர்

உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணிப்பித்த பெண் பயனாளிகளின் பட்டியலைக்கொண்டு மதுரை ஆட்சியர் சங்கீதா வீடுவீடாக ஆய்வு செய்தார். ஆய்வு செய்வதை படமெடுக்க செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு.

தமிழக அரசு சார்பில் மகளிருக்கு ரூ1000வழங்கும் கலைஞரின் மகளிர் உரிமைத்திட்டம் வழங்கப்பட உள்ளது.இதற்காக மகளிரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் தற்போது உண்மையான பயனாளிகளை தேர்ந்தெடுக்கும் பணிகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் மகளிர் உரிமைத்திட்டத்திற்கு பெண் பயனாளிகளை தேர்ந்தெடுக்க விண்ணிப்பித்த பெண் பயனாளிகளின் பட்டியலைக் கொண்டு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா செல்லம்பட்டி யூனியன் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.முதற்கட்டமாக செல்லம்பட்டி பகுதியில் ஆய்வு செய்து சில பயனாளிகளை தேர்வு செய்த ஆட்சியர் சங்கீதா செய்தியாளர்கள் உடன் வருவதைப் பார்த்தவுடன் செய்தியாளர்களுக்கு அனுமதி இல்லை எனக்கூறி உடனடியாக அதிகாரிகளை விட்டு செய்தியாளர்களை அப்புறப்படுத்த வைத்தார்.ஆய்வு செய்வது போல் ஒரு புகைப்படம் எடுத்து விட்டுச்செல்கின்றோம் என்ற போதும் அனுமதிக்கவில்லை.ரகசியமாக நடைபெறும் இந்த ஆய்வினால் உண்மையான பெண் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவது சாத்தியமாகுமா என அங்கிருந்த பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com