தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு ….

தமிழ்நாடு முதலமைச்சர் 05.06.2018 அன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை ஜனவரி 1 2019 முதல் அமலுக்கு வரும் என அறிவித்து, அதற்கான அரசாணை வெளியிட்டார்கள்.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர்  பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பிளாஸ்டிக் மாசு இல்லா தமிழ்நாடு என்ற ஒரு இலட்சினை, இணைய தளம், கைபேசி செயலி மற்றும் விழிப்புணர்வு குறித்த குறும்படம் ஆகியவற்றை தொடங்கி வைத்து அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உத்தரவிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு உணவகங்கள், திருமண மண்டபங்கள்ää வணிக வளாகங்கள் உள்ளிட்ட நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டங்கள்; நடத்தப்பட்டு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் பயன்படுத்தப்படுகிறதா என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, வி.வி.டி. சிக்னல் முதல் 3ம் மைல் வரையிலுள்ள பல்வேறு கடைகளுக்கு இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் சில்லறை கடை, உணவகங்கள் உரிமையாளர்களிடம், ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கேரிபேக், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள், தெர்மகோல் தட்டுகள் உள்ளிட்ட 14 வகையிலான பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தினார். மேலும் ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களான துணிப்பைகள். வாழையிலை, மண் பாத்திரங்கள்ää பாக்குமர இலை தட்டுகள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு வலியுறுத்தப்பட்டது.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி

#Paid Promotion