Home செய்திகள் வானிலை காரணமாக கோவையில் தரையிறங்கிய ஹைதராபாத் – மதுரை இன்டிகோ விமானம்..

வானிலை காரணமாக கோவையில் தரையிறங்கிய ஹைதராபாத் – மதுரை இன்டிகோ விமானம்..

by ஆசிரியர்
ஹைதராபாத்தில் இருந்து மதுரை வரும் இண்டிகோ விமானம் மாலை 6:40 அளவில் மதுரை விமான நிலையம் வந்தடையும் தற்போது வானிலை மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத சூழ்நிலையில் கோயம்புத்தூர் சென்று இண்டிகோ விமானம் 7.20 மணியளவில் தரையிறங்கியது.
ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு பயணம் செய்த 221 பயணிகளும் கோவை விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். எரிபொருள் நிரப்பிய பின் மீண்டும் 221 பயணிகளுடன் மதுரை விமான நிலையம் வந்தடையும்.  வானிலை காரணத்தால் மதுரை வரவேண்டிய விமானம் கோயம்புத்தூர் சென்றதால் பரபரப்பாக காணப்படுகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!